Pages

Search This Blog

Friday, December 7, 2018

சார்லி சாப்ளின் - சம்சா சல்பசா நினைச்சா சக்சஸ்ஸா

சம்சா சல்பசா நினைச்சா சக்சஸ்ஸா
ஆச்சா கிஸ்கிஸ்ஸா ஆகி போச்சா
ரம்பா ஊர்வசி எல்லாம் பிரைவேஸி
உன் போல் பார்மஸி யாரு ரோஜா
நீ சைவம் என்று சொன்னால்
நம்ப மாட்டேன் பெண்ணே
உன் கண்களுக்கும் மின்னல் உள்ளதே
பியூட்டி பியூட்டி காதல் பியூட்டி  (சம்சா)
 
சுட்டி பையன் போல நீயும் முட்டி முட்டி சேவை
செய்ஞ்சு லொள்ளு பண்ணுறே தொல்ல பண்ணுறே
 
தூக்கம் கெட்டு போன என்ன துன்ப காதல்
ஊஞ்சல் கட்டி தூங்க செய்யடி
என்ன தூங்க சொல்லடி
 
பட்டிமன்றம் வச்சு என்ன ஜெயிக்க பாக்குற
பொத்தி வச்ச இளமைய தான் பரிசு கேக்குற
 
வேர்வை எல்லாம் சேகரிச்சு வெப்பம் ஆக்கட்டா
வெட்டி போட்ட நகத்த எல்லாம் கப்பல் ஆக்கட்டா
 
நிறுத்து நிறுத்து உன் சேட்டைய
மறுக்க வேணாம் இந்த கோட்டைய  (சம்சா)
 
கண்ணுக்குள்ள ஐpன்ன வச்சு
கண்ணு மேல ஒயினை வச்சு
அள்ள பாக்குற என்ன கொல்ல பாக்குற
 லுக்கு மேல லுக்கு விட்டு கிக்கு மேல
கிக்கு ஏத்தி என்ன பாக்குற நீ என்ன கேக்குற
 
நெத்தி முடி சுருளும் பொண்ண சிக்க வைக்கிற
இரட்டை சடை ரிப்பனுக்குள் கட்டி வைக்கிற
 
கட்டழகு பாத்தவுடன் முட்டி போடுற
கட்டிலோடு வச்சு என்ன கட்டி போடுற
 
வருது வருது அது வீணடி 
விளக்கு ஊதி என்ன சேரடி  (சம்சா)



Charlie Chaplin - Shansha Shalpashaa

சார்லி சாப்ளின் - கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும்

ஆ: கண்ணாடி சேலகட்டி கட்டழக காட்டும் குட்டி
என்னடி சேதி சொல்லடி முகம் பார்க்க
முன்னாடி வந்து நில்லடி
 
ஆ: கொக்கு பிடிக்க வந்து நோட்டம் போட்டு நிற்பவரே
சேலைக்குள் தோட்டம் போடாதே
இந்த பூவ முழம் போட்டு சுத்த பாக்காதே
 
ஆ: இடைமீது விரல் கொண்டு மேலேமேலே போகட்டுமா
 
பெ: என்னோட மெல்லிடை என்ன 
காமன் வீட்டு படிகட்டா
 
ஆ: கல்கண்டு கன்னம் பாத்து
காக்கா கடி கடிக்கட்டா  (கண்)
 
ஆ: உன்னோட ஸ்டிக்கர் பொட்டு
என் நெஞ்சில் ஒட்டிக்கிட்டு
சொல்கின்ற கதைகள் என்ன கொஞ்ச நஞ்சமா
 
பெ: நீ என்னை தள்ளிவிட்டு தூக்காமல் விட்டுவிட்டு
வேடிக்கை பாத்ததென்ன கொஞ்ச கொஞ்சமா
 
ஆ: உன் செல்ல கோபத்தை முத்தத்தால் மாத்தட்டா
 
பெ: முத்தத்தின் ஈரத்தில் மின்சாரம் சேர்க்கட்டா
 
ஆ: அம்மாடி அம்மாடி தஞ்சாவ{ர் பொம்மை யாரு
 
பெ: தலையாட்டு தலையாட்டு இது நல்ல தண்டனைதானே
 
ஆ: வாம்மா நீ பிச்சி பிச்சு தாம்பூலந்தான் ஆட  (கண்)
 
பெ: என்னோட வெட்கம் விட்டு ஒன்ன நான் வாங்கி
வந்து நெஞ்சோட வச்சிருக்கேன் தப்பி செல்லாதே
 
ஆ: தப்புன்னா திட்டு திட்டு தலமேல கொட்டு கொட்டு
கட்டில விட்டு மட்டும் கீழ தள்ளாதே
 
பெ: என் சேலை பூவுக்குள்ளே
தென்றல் போல் தங்கிவிடு
 
ஆ: வேருக்குள் செல்கின்ற வித்தைகள் சொல்லி கொடு
 
பெ: ஒன் நிழல என் நிழல ஒன்னாக சேர வைப்போம்
 
ஆ: சூரியன் மூடிவிட அதிலே ஒரு போர்வை தைப்போம்
 
பெ: காலத்தை மாற்றி மாற்றி காதலுக்குள் வாழ  (கண்)



Charlie Chaplin - Kannadi Selai Katti

சார்லி சாப்ளின் - மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு

மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு
மாமு மாமு மாமு நீ மாட்டிக்கிட்ட மாமு
சூர்ப்பநக தேடிக்கிட்டே சுத்திவரும் ராமர்களே
சார்லி சாப்ளின் போல் விட்டடிக்கும் ஜோக்கர்களே
பொட்டிக்கான முத்து கொணடு நட்சத்திர
ஓட்டல் வாங்க ஊட்டி குளுருக்குள்ள
பார்ட்டி ஒருத்திய தான் தேடி போனா
தேடி போனா கிடைச்சுடுமா 

மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு 
மாமு மாமு மாமு நீ மாட்டிக்கிட்ட மாமு
 
ஊதி ஊதி செய்ஞ்ச பலூனும் இங்கே
ஊசி முனை பட்டா வெடிச்சிடுமே
அலாவுதீன் விளக்குக்கு நல்லெண்ணையா
தொப்பையத்தான் நீங்க கர்ப்பமுன்னு சொன்னா
பத்து மாசம் முடிஞ்சா தெரிஞ்சிடுமே
கடுகுக்குள்ள பூசணிக்கா மறஞ்சிடுமா
நேபாள மன்னன் அரசாட்சி அழிச்சது
அங்கொரு அழகியப்பா
சாக்ரடீஸ் குடிச்ச விஷத்துக்கு பேர் ஹேம்லாக்
இல்ல பெண் தானப்பா பட்டினத்தார் தொங்கி
பில்கிளிண்டன் வரைக்கும் பெண்
வழி போனவன் திரும்பலப்பா

மாமு மாமு மாமு லாலி பப்பு மாமு 
மாமு மாமு மாமு நீ மாட்டிக்கிட்ட மாமு



Charlie Chaplin - Mammu Mammu

சார்லி சாப்ளின் - வார்த்தை தவறி போனதனாலே

வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு
வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே
மின்னலுக்கும் மின்மினிக்கும் தகராறு  (வார்த்தை)
 
கண்ணீருக்கு கர்ணன்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதி மரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வரவழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதினை கண்டுபிடிக்க
மற்றுமொரு கொலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுரையா
கரையே இல்லாத கடற்கரையா



Charlie Chaplin - Vaarthai Thavari Ponathanaley

சார்லி சாப்ளின் - பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா

சும்மா சும்மா சும்மா சும்மா…
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா…
 
பய்யன் ஒருத்தன் சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவனும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா…
 
சும்மா சும்மா பேசி சும்மா சும்மா பழகி
ஆசை காட்டி ஆசை காட்டி ஆளகொன்னுட்டா
சலமு… சலமுசிக்கா……  (பொண்ணு)
 
சும்மா சும்மா சும்மா உரசி உரசி
சும்மா சும்மா சும்மா கொஞ்சி கொஞ்சி
சும்மா சும்மா சும்மா சீண்டி சீண்டி
சும்மா சும்மா சும்மா ரசிக்கிறான்
 
சும்மா சும்மா சும்மா ஜாடகாட்டி
சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி
சும்மா சும்மா சும்மா கொலுச ஆட்டி
சும்மா சும்மா சும்மா கலக்குறா சலமுகிக்கா…
 
ஆசை வச்சி ஆசை வச்சி காய்ச்சலாகி போனது
மீசை முடி மீசை முடி ஊசியாக ஆனது
 
நெத்திக்கு பொட்டு வேணுமுன்னா நிலவ திருடவா
 
சந்தனம் பூச வேணுமுன்னா வீரப்பன கடத்தவா
 
ஐஸ் மேல ஐஸ் வெச்சு நைஸ்சு பண்ணாதே  (பய்யன்)
 
சும்மா சும்மா சும்மா விளக்க பாத்து
சும்மா சும்மா சும்மா நகத்த காமிச்சு
சும்மா சும்மா சும்மா வளஞ்சு நெலிஞ்சு
சும்மா சும்மா சும்மா உசுப்புறா சலமுசிக்கா சலசல…
 
சும்மா சும்மா சும்மா மொறச்சு மொறச்சு
சும்மா சும்மா சும்மா மனச புழிஞ்சு
சும்மா சும்மா சும்மா தீயமூட்டி
சும்மா சும்மா சும்மா உலுக்குறான்
சலமுசிக்கா சலசல
 
வள்ளுவனும் ஒன்ன போல காமத்துப்பால் வடிக்கல
வயகராவே தேவயில்லை நீ சிரிக்கிற ஊருலே
 
எடைக்கு எடை எடைக்கு எடை முத்தமிடலாமா
காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்ட வரலாமா
 
சும்மா கிடந்த சங்கு என்ன ஊதி கெடுக்குற



Charlie Chaplin - Ponnu Oruthi Summa

சார்லி சாப்ளின் - அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா

அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா
அவ கன்னம் பாத்தா ஐய்யோ அம்மா
அவ உதட்ட சுழிச்சா ஐய்யோ அம்மா
அவ சிணுங்கி சிரிச்சா ஐய்யோ அம்மா
அவ குதிக்கும் ஜடதான் ஐய்யோ அம்மா
அவ கலக்கும் நடதான் ஐய்யோ அம்மா  (கண்ண)
 
கண்ணாடி பாக்கமாக நம்ம பொண்ணுங்க
அழகின்னு நினைப்பாங்க உன் ஆளு எப்படி
 
நெய்வேலி மின்சாரம் போல சிரிக்கிறா
தீக்குச்சி இல்லாம மனச கொளுத்துறா
கழுத்தோர மெய்காலிலும் பூவாசம் பிறக்கும்
அசைந்தாடும் பொழுது புது புது
கவிதைகளும் பிறக்கும் காதோரத்தில்
சுருண்ட முடி கன்னம் வரை படர்ந்திருக்கும்
பூமத்திய ரேகையை போல் 
புருவங்களும் வளைந்திருக்கும்
 
தாடி வச்ச கம்பன் போல தங்கதமிழ்
கவிதைபோலே பொண்ண பத்தி
சொல்லி என்ன சொக்க வச்ச  (அவ)

திருடா ஒன் மனசோட மூச்ச குறச்சவ
நெஞ்சுக்குள் உக்காந்து என்னென்ன செய்யுறா
 
எனக்குள்ள நீங்காம கதிரா இருக்குறா
கனவுக்குள் அவ வந்து கஞ்சா விதைக்கிறா
உயிரை கருப்பாக்கி கண்ணுக்கு
மையா தீட்டிக்கிட்டா கைபிடி அளவுள்ள
இதயத்தை கப்பல் நிறுத்திப்புட்டா சின்ன சின்ன
நகங்களுக்கு நெஞ்சுக்குள்ள நெருப்பு வச்சா
 
போதாதுன்னு பார்வைகளால் பெட்ரோலை
தான் தெளிச்சி விட்டா
 
உனக்குள்ள இருக்கிற நூறு மீட்டர் நரம்புக்குள் 
ரத்ததானம் செய்வதந்த பெண்தானப்பா  (அவ)



Charlie Chaplin - Ava Kannapaatha Ayyo Amma

பூமராங் - தேசமே கண் முழிச்சிக்கோ ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ

தேசமே கண் முழிச்சிக்கோ
ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ
பேர் வேண்டாம்
மதம் சாதி வேண்டாம்
உசுர ஒண்ணாக்கி காட்டு

கடவுளும்
அந்த கவர்ண்மெண்ட்டும்
ரொம்ப ஒசரத்தில்
இங்கே இருக்கு பார்
சேர்ந்தா தான் நெடுந் தூரம் கேட்கும்
குரலை நீ ஏத்தி காட்டு

மரம் செடி மனுஷென
மறுபடி வெதைச்சிடுவோம்
தடை வந்த ஒரே அடி
நொடியிலே முடிச்சிடுவோம்

தடி வெச்சு கலைச்சிட
நெனச்சிட சீறிடுவோம்
கடல் கரை சொல்லும் கதை
சரித்திரம் ஆக்கிடுவோம்

இந்த கூட்டம் போனாலும ஓ
எங்க கூச்சல் போகாது

விவசாயி இல்லயெனா
எங்க கை விரிப்போம்
டேய் அவன் வாழ்வ சொரண்டாத
தடுத்து தோல் உரிப்போம்

காவேரி இல்லையெனா
வேர்வையில் நீர் எடுப்போம்
ஆனாலும் ஒரு நாலு
எங்க உரிமைய மீட்டு எடுப்போம்

காத்தோடு தான் தாளம்
தட்டி வந்துட்டோம்
கம்மாயில மீனா முங்கி வந்துட்டோம்
இந்த நெல்லோட நிழல
நம்பி வந்துட்டோம்
தாய் மண்ணோட
மடியில வாழுறோம்

நம்ப பொருள் நாசமாச்சி
அங்க வேற நாட்டில்
போய் வல்லரசு ஆக்குறோமே
வாரத்தில எட்டு நாலு
அங்கே வேலை செஞ்சு
நம்ப ஆவியை போக்குறோமே
அவன் லாபத்த ஏத்துறோமே

கார்ப்ரேட்டு ஷீப் ரேட்டு
சில அடிமை தலைகல செய்துடா
உன் நோட்டு கை நாட்டா
ஒரு அட்டை பூச்சியா தின்னுதுடா
ஆனாலும் உன்னை ஜெயிச்சா
திமிர் ஒடம்பு
வேர்வையில மின்னுதுடா

என்ன இல்ல நம்ம மண்ணில்
வெதைச்சத அறுத்துகடா
சோறு தந்த அம்மா இவ
கலப்பைய வாங்கிக்கடா
இவ கலப்பைய வாங்கிக்கடா

தேசமே கண் முழிச்சிக்கோ
ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ
பேர் வேண்டாம்
மதம் சாதி வேண்டாம்
உசுர ஒண்ணாக்கி காட்டு

கடவுளும்
அந்த கவர்ண்மெண்ட்டும்
ரொம்ப ஒசரத்தில்
இங்கே இருக்கு பார்
சேர்ந்தா தான் நெடுந் தூரம் கேட்கும்
குரலை நீ ஏத்தி காட்டு

மரம் செடி மனுஷென
மறுபடி வெதைச்சிடுவோம்
தடை வந்த ஒரே அடி
நொடியிலே முடிச்சிடுவோம்

தடி வெச்சு கலைச்சிட
நெனச்சிட சீறிடுவோம்
கடல் கரை சொல்லும் கதை
சரித்திரம் ஆக்கிடுவோம்

இந்த கூட்டம் போனாலும ஓ
எங்க கூச்சல் போகாது

விவசாயி இல்லயெனா
எங்க கை விரிப்போம்
டேய் அவன் வாழ்வ சொரண்டாத
தடுத்து தோல் உரிப்போம்

காவேரி இல்லையெனா
வேர்வையில் நீர் எடுப்போம்
ஆனாலும் ஒரு நாலு
எங்க உரிமைய மீட்டு எடுப்போம்



Boomerang - Desamae Kann Mulichikko Oru Kootamai

Followers