Pages

Search This Blog

Friday, November 30, 2018

வாழ்வே மாயம் - மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது (2)

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது

சரணம் - 1

மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம் (2)
விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்
பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

சரணம் - 2

ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய (2)
கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம்
தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆ...ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது



Vaazhve maayam - Mazhai kaala megam Ondru

Thursday, November 29, 2018

கிழக்கே போகும் ரயில் - கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி…பாஞ்சாலி

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி…பரஞ்சோதி

கோவில் மணி ஓசைதன்னை
கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னிப்பூவோ பிஞ்சுப்பூவோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ

கோவில் மணி ஓசைதன்னை
செய்ததாரோ அவர் என்ன பேரோ
பாட்டுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக்கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்னச்சின்ன முல்லை கிளிப்பிள்ளை
என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக்கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும்வரை பாடு தாளம் போடு
அதை நீயே கேளு

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ

என் மனது தாமரைப்பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப்பாரு
நல்ல பெண்ணைக் கண்டால் கொஞ்சம் சொல்லு
அது நீதானம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ…பாடுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ



Kizhakke Poghum Rail - Koil Mani Osai

செம்பருத்தி - நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது
நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும் ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்
அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்



Sembaruthi - Nila Kaayum Neram Saranam Ula Poga Neeyum Varanum

அவள் மெல்ல சிரித்தாள் - தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

ஆடி மாதம் ஆசையோடு பொங்கும் காவேரி
பாடும்போதும் கூடும்போதும் வாடும் பொன்மேனி
பகலிலும் வரும் இரவிலும் நீ படிக்கும் காதல் காவியம்
பருவமும் நல்ல உருவமும் ஒன்று கலந்து வந்த ஓவியம்
இடைவிடாத நாடகம் அதை நடித்துப் பார்த்திட ஆசை
திருவிழா வரும் வேளையில் இங்கு தினமும் காதலின் பூஜை
இரவில் கேட்குது உறவின் ஓசை இனிய மார்கழி வேளை

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

வீணை என்னும் மேனியெங்கும் விரல்கள் விளையாட
மானைப்போன்ற பெண்ணின் நெஞ்சில் நாணம் அணைபோட
உடலிலே புதுக்கவிதைகள் நான் எழுதும் வேளை இரவுதான்
கடலிலே வரும் அலைகள் போல் நாம் கலந்துகூடும் உறவுதான்
மடியிலே தலை சாய்க்கவும் இமை மூடவும் மனம் கேட்கும்
இடையிலே உந்தன் விழியிலே பல கோடி ஆசைகள் தாக்கும்
மதனும் ரதியும் கூடும் நேரம் மேகம் நீர்த்துளி வார்க்கும்

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே



Aval Mella Sirithaal - Thegam Yengum Moga Vellam

சந்தனக்காற்று - ராவு நேரம் வாடக்காத்து

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு
ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ள
பாயப்போடு என் நோயத்தீரு
பாயப்போடு என் நோயத்தீரு
ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு

ஏ மச்சான் கை பட்டாலே
மகராசி முகம் செவக்கும்
மகராசி தொட்டாலே
சொர்க்கம்தான் உருவாகும்
சாமக்கோழி கூவையில
சத்தம் இல்லாத முத்தம் தா
சாமக்கோழி கூவையில
சத்தம் இல்லாத முத்தம் தா
ஒரு மாதிரி கேக்குது மூச்சு
இந்த ராவுல வேறெது பேச்சு
ஒரு மாதிரி கேக்குது மூச்சு
இந்த ராவுல வேறெது பேச்சு
மோகம் அது ஒரு மோகம்
யோகம் இருட்டுக்கு யோகம்

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு

தலைவாழ இலைபோட்டு
பலகாரம் பழம் எல்லாம்
பரிமாறி வச்சிருக்கு
பசி நேரம் வந்தாச்சு
சப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்
சப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்
ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கதுவே போதும்
ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கதுவே போதும்
வயசு சிரிக்குது எளசு
சிரிச்சா மயங்குது மனது

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு
ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ள
பாயப்போடு என் நோயத்தீரு
பாயப்போடு என் நோயத்தீரு



Sandhana Kaatru - RaavuNeram Vaada Kaathu

ஈரமான ரோஜாவே - அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

உனது பாதம் அடடட இளவம் பஞ்சு
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜகோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா நாணம் என்ன வா வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
பந்து ஆடச்சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச்செய்த பிரம்மனே உன்னைப்பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே



Eeramana Rojave - Atho Mega Oorvalam

அன்புள்ள அத்தான் - ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்

ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்
ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்
நீந்தி வரும் வேளையிலே நீர்க்குடித்தேன் பாதியிலே
நீந்தி வரும் வேளையிலே நீர்க்குடித்தேன் பாதியிலே

காதலென்னும் சேதி சொன்னேன் காகிதத்தில் தூதுவிட்டேன்
காதலென்னும் சேதி சொன்னேன் காகிதத்தில் தூதுவிட்டேன்
ஆசை வைப்பான் என்றிருந்தேன் ஆதரித்தான் நான் மகிழ்ந்தேன்
ஆசை வைப்பான் என்றிருந்தேன் ஆதரித்தான் நான் மகிழ்ந்தேன்

ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்
நீந்தி வரும் வேளையிலே நீர்க்குடித்தேன் பாதியிலே

மாலைகட்ட காத்திருந்தேன் மஞ்சளையே பார்த்திருந்தேன்
மாலைகட்ட காத்திருந்தேன் மஞ்சளையே பார்த்திருந்தேன்
மாலைகட்ட நேரமில்லை நாணம் கெட்டுப் போனதம்மா
மாலைகட்ட நேரமில்லை நாணம் கெட்டுப் போனதம்மா

சின்னமுத்து சிட்டுமுத்து வண்ணமுத்து வாசமுத்து
சின்னமுத்து சிட்டுமுத்து வண்ணமுத்து வாசமுத்து
என்னிடத்தில் மீண்டும் வர யாரிடத்தில் போயுரைப்பேன்
என்னிடத்தில் மீண்டும் வர யாரிடத்தில் போயுரைப்பேன்

சிப்பி இது பெற்றதுதான் சீரிழந்து போனதுதான்
அப்பொழுதும் என் மனதை ஆண்டவன்போல் அவன் அறிவான்
அப்பொழுதும் என் மனதை ஆண்டவன்போல் அவன் அறிவான்
ஆண்டவன்போல் அவன் அறிவான் ஆண்டவன்போல் அவன் அறிவான்



Anbulla Athan - Aazhakkadal Neenthi Vanthen

Followers