Pages

Search This Blog

Thursday, November 29, 2018

அவள் மெல்ல சிரித்தாள் - தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

ஆடி மாதம் ஆசையோடு பொங்கும் காவேரி
பாடும்போதும் கூடும்போதும் வாடும் பொன்மேனி
பகலிலும் வரும் இரவிலும் நீ படிக்கும் காதல் காவியம்
பருவமும் நல்ல உருவமும் ஒன்று கலந்து வந்த ஓவியம்
இடைவிடாத நாடகம் அதை நடித்துப் பார்த்திட ஆசை
திருவிழா வரும் வேளையில் இங்கு தினமும் காதலின் பூஜை
இரவில் கேட்குது உறவின் ஓசை இனிய மார்கழி வேளை

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

வீணை என்னும் மேனியெங்கும் விரல்கள் விளையாட
மானைப்போன்ற பெண்ணின் நெஞ்சில் நாணம் அணைபோட
உடலிலே புதுக்கவிதைகள் நான் எழுதும் வேளை இரவுதான்
கடலிலே வரும் அலைகள் போல் நாம் கலந்துகூடும் உறவுதான்
மடியிலே தலை சாய்க்கவும் இமை மூடவும் மனம் கேட்கும்
இடையிலே உந்தன் விழியிலே பல கோடி ஆசைகள் தாக்கும்
மதனும் ரதியும் கூடும் நேரம் மேகம் நீர்த்துளி வார்க்கும்

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே



Aval Mella Sirithaal - Thegam Yengum Moga Vellam

Followers