Pages

Search This Blog

Wednesday, November 28, 2018

அம்பிகை நேரில் வந்தாள் - மாமா மாலை நேரம்

மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

மனதை இழுக்கும் பார்வை போட்டு
மடியில் இருந்து வாழ்ந்திடு
மறுநாள் விடியும் பொழுதைப் பார்த்து
மயக்கம் தெளிந்து எழுந்திடு
இளமை என்னும் வீணை மீட்டு
இதமாய் என்னை நீ தொடு
இடையே ஏதும் தடைகள் என்றால்
இரண்டோ மூன்றோ நீ கொடு
என்னோடுதான் என்றென்றுமே நீராடிடு
இன்பங்களின் சொந்தங்களை நீ அள்ளப் போராடிடு

லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

உலகை மறந்து உறவை மறந்து
மனதைத் திறந்து பாடிடு
உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை
உணரும் வரைக்கும் ஆடிடு
பசியைத் தீர்க்கும் உணவை உண்டு
மேலும் மேலும் பசித்திரு
பருவம் என்னும் மேடை வந்த
பாவை என்னை ரசித்திரு
கண் மூடினால் வேறென்னதான் நீ பார்ப்பது
காதல் சுகம் ஆசைகளை நீ கண்டு வாழ்ந்திரு

லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்



Ambigai Neril Vandhaal - Mama Maalai Neram 

சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்

காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆ ஹா



Sollathan Ninaikiren -  Sollathan Ninaikiren

தூரத்து பச்சை - ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை

காதல் தானே பருவ கால நீதி
காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி
பாலைவனம் போல் உலகம் இருந்தும்
உனது மடியில் இருந்தால் வசந்தம்
எந்தன் தோளைச் சேர்ந்த மாலை
எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை

உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில்
காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில்
ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும்
இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்
காதல் என்னும் தேவ பந்தம்
சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ

ஆனந்த மாலை ஆ தோள் சேரும் வேளை ஆஆ ஆஆ
வேறென்ன ஆ ஆ வேளை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

லாலால லாலா லாலால லாலா
லாலால லாலா லாலா லலா
லாலால லாலா ஆ ஆ லாலால லாலா ஆ ஆ
லாலால லாலா ஆ ஆ லாலா லலா ஆ



Thooraththu Pachchai - Aanantha Maalai Thol serum Velai

Tuesday, November 27, 2018

: தலைவாசல் - அதிகாலைக் காற்றே நில்லு

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு

இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ…ஓஓஓ…ஓஓஓ…ஓஓஓ
காலை மேகம் சோலை ஆகும்
வானம் எங்கள் சாலை ஆகும்
தாமரை குடை விரிக்கும்

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு

மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ…ஓஓஓ…ஓஓஓ…ஓஓஓ
வான வில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே



Thalai Vaasal - Athi Kaalai Kaatre Nillu

நான் சிகப்பு மனிதன்(1985) - பெண்மானே சங்கீதம் பாடிவா

பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா

தேன்மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கையருகில் பூமாலை காதலின் கோபுரம்
மைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர் புறம்
என் காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாடவா

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேகமழை நானாகும் தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வராதோ

பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா



Naan Sigappu Manithan(1985 film) - Penn Maaney Sangeetham Paadiva

கழுகு - பொன்னோவியம் கண்டேனம்மா

லாலா லலா
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
பொன்னோவியம்

காதல் காதல் காதல் தினம் தேனாகும்
வாழ்வில் கீதம் பாடும் மனம் பாலாகும்
பாயும் நதி நீரோடு நீந்தும் சுகம்
நூறாகும்…நூறாகும்
பூவில் இளந்தென்றல் வந்து ஆடிச்செல்லும்
போதை கொண்ட நெஞ்சம் இன்று பாடச்சொல்லும்
கைகள் இணையும் கண்கள் மயங்கும்
சொர்க்கம் திறக்கும்

லாலா லலா
லாலா லலா லாலா லா
லாலா லலா லாலா லா

மேகம் வந்து சேரும் மயில்தான் ஆடும்
மோகம் கொண்ட நெஞ்சம் துணை சீராட்டும்
கோவை இதழ் தேனுண்டு கொஞ்சும் கிளி
நானுண்டு…நானுண்டு
பாச்சைமலை எங்கும் துள்ளி ஓடும் மான்கள்
இச்சையுடன் கொஞ்சிக் கொஞ்சி ஆடும் நேரம்
காயும் கனியும் மொட்டும் மலரும்
சொர்க்கம் தெரியும்

பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
லாலா லலா



Kazhugu - Ponnoviyam Kandenamma

Tuesday, November 20, 2018

கோழி கூவுது - பூவே இளைய பூவே

பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே

பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்தததே

இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே

இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது

இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
எனக்குத்தானே



Kozhi Koovuthu - poove ilaya poove

Followers