Pages

Search This Blog

Wednesday, November 28, 2018

தூரத்து பச்சை - ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை

காதல் தானே பருவ கால நீதி
காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி
பாலைவனம் போல் உலகம் இருந்தும்
உனது மடியில் இருந்தால் வசந்தம்
எந்தன் தோளைச் சேர்ந்த மாலை
எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை

உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில்
காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில்
ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும்
இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்
காதல் என்னும் தேவ பந்தம்
சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ

ஆனந்த மாலை ஆ தோள் சேரும் வேளை ஆஆ ஆஆ
வேறென்ன ஆ ஆ வேளை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

லாலால லாலா லாலால லாலா
லாலால லாலா லாலா லலா
லாலால லாலா ஆ ஆ லாலால லாலா ஆ ஆ
லாலால லாலா ஆ ஆ லாலா லலா ஆ



Thooraththu Pachchai - Aanantha Maalai Thol serum Velai

Followers