Pages

Search This Blog

Wednesday, August 15, 2018

ரோஜா - காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே

ஆண் : காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண் : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (இசை)

பெண்குழு : ல..ல ல...லலலா...ல..ல ல...லலலா..
ல..ல ல...லலலா..லல லல லல லலலா....

ஆண் : தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

ஆண் : வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

ஆண் : வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

ஆண் : பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்



Roja - Kaadhal Rojave

ரோஜா - தமிழா தமிழா நாளை நம் நாளே

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா (இசை)

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட வாடினால் நிலமென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது.. எழுவோம் (இசை)



Roja - Thamizha Thamizha

ரோஜா - புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)

பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)

***

ஆண் : பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

***

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்
பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது



Roja - Puthu Vellai

ரோஜா- சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும்

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

பெண் : மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை...
கார்குழலில் உலகை...கட்டிவிடஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை (இசை)

ஆண்: ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...

பெண் : சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றிவர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை



Roja - Chinna Chinna

Tuesday, August 14, 2018

ஜெய்ஹிந்த் 2 - அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே

அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே
அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே
கல்விக் கண் தொறக்க வந்த காமராசு வகையறாவே
பிச்சை எடுத்தாச்சும்படிக்க வைக்க சொல்றாங்க
பிள்ளைக படிப்புக்கு பிச்சை எடுத்தோம்
நாங்க பணக்காரன் படிப்பா
ஏழைக்கும் தாங்க
கல்விக்கு வழி சென்சா
கடவுள்தான் நீங்க அய்யா படிச்சவரே
அஞ்செழுத்து அர்ச்சுனரே  கல்விக் கண்
தொறக்க வந்த காமராசு வகையறாவே

ஆனா வெல குதிர வெல
ஆகிப்போச்சு படிப்பு எம்மா
ஆனா வெல குதிர வெல
ஆகிப்போச்சு படிப்பு எங்க ஆஸ்தியெல்லாம்
வித்து வித்து அத்து போச்சு பொழப்பு
மூணாங் க்லஸ்ஸு படிக்க வச்சா ஆ
மூணாங் க்லஸ்ஸு படிக்க வச்சா
மூணு காலி போச்சு ஏழாங் க்லாஸ் போகும்
முன்னே இருந்த வீடும் போச்சு
இருந்த வீடும் போச்சு வீணையத்தான் வித்துப்புட்டா
சரஸ்வதி ஆத்தா அவ பணம் கட்ட
முடியாம பரிட்சையிலே தோத்தா
அய்யா படிச்சவாறே அஞ்செழுத்து அர்ச்சுனரே
கல்விக் கண் தொறக்க வந்த
சரஸ்வதி நமஸ்தூபியம்
வராதே காம ரூபிணி
விடியரம்பம் கரிஷ்யாமி
சிட்தீர் பவது
மெ சதா

காத்திருக்கும் நெருப்புக்கும் பொதுஉடமை இருக்கே
கல்விக்கும் படிப்புக்கும் பொதுஉடமை இருக்கா
உப்புக்கும் பருப்புக்கும் 
ஹோ ஒ ஓ
உப்புக்கும் பருப்புக்கும் போராட்டம் இருக்கே
தப்புக்கும் தவருக்கும் போராட்டம் இருக்கா
மாடிக்கும் சேரிக்கும் ஒரு பள்ளி வேண்டும்
தரமான ஒரு கல்வி
சமமாக வேண்டும்
படிப்பற்ற சமுதாயம்
பேய் வாழும் கிடங்கு 
பாரதத்தின் சோசியலிசம்
பள்ளியிலே தொடங்கு

அய்யா பெரியவரே அன்புள்ள தாய் மாரே
நாலெழுத்து படிக்காம தலை எழுத்து
மாறாது புத்தி மாறாம
பொது உடமை வாராது
கத்‌தி எடுக்காம கல்வி முறை
மாறாது பொது கல்வி
உண்டாக போராட வாங்க
கல்வி மட்டும் உண்டானா
கடவுள்தான் நீங்க



Jaihind 2 - Ayya Padichavare

ஜெய்ஹிந்த் 2 - இவன் யாரிவன் நெருப்பானவன்

இவன் யாரிவன்
நெருப்பானவன்
உயிர் காத்திடும்
துடிப்பானவன்
நேர் பார்வையால்
என்னை கொன்றவன்

சட்டென்று
என் நெஞ்சில்
காதலை வீசினான்
தோட்டாக்கள் போலத்தான்
எப்போதும்
பேசினான்
உன் கையில்
இருந்து நான்
தப்பிக்க
எண்ணினேன்
இப்போது உன் பேரை
ஒப்பிக்க
ஏங்கினேன்
சொல்லவா
காதலா
நீ எந்தன்
காவலா
ஒரு நாளும்
எனக்குள்ளே
துடிப்பில்லை
என்னுள்ளே
அடி பெண்ணே
அழகாலே
என் நெஞ்சை மூட்டாதே

நீ ஒரு ராணுவம்
ஆசைகள்
மூடுதே
புன்னகை ஆயுதம்
பூவீசி கொல்லுதே
நீ எல்லை மீறிட
என் நெஞ்சம்
எங்குதே
மன்மத தேசமே
என் முன்பு
தோன்றுதே
யாறிவன் என்னை
ஈர்த்தவன்
காதலில்
என்னை கோர்த்தவன்
ஒரு கண்ணில்
வெயில் காலம்
மறு கண்ணில்
குளிர் காலம்
இது போதும்
இது போதும்
இனி என்றும்
ஆனந்தம்
இவன் யாரிவன்
நெருப்பானவன்
உயிர் காத்திடும்
துடிப்பானவன்
நேர் பார்வையால்
என்னை கொன்றவன்



Jaihind 2 - Ivan Yaarivan

ஜெய்ஹிந்த் 2 - அடடா நெஞ்சில் அடடா

அடடா நெஞ்சில் அடடா
அழகாக நீ நடந்த கால் சுவடா
திருடா செல்ல திருடா
உன்னை நானும்
திருடி விட்டேன்
என் முரடா
உன்னை நானும்
இடையினில்
மீட்டவா
உனதாக உணர்ச்சிகள்
காட்டவா
உறுத்தாமல் உதடுகள்
முட்டவா
அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா

ய்யா
ம் ஹ்ம் ஹ்ம்
வா
அ ஆ
இன்ப அவஸ்தைகள்
செய்கிறாய்
ம் ம்
ஐயை யோ யோ
தா
அச்ச் சோ சோ
அடி அழகாலே
கொஞ்சிக் கொஞ்சிக்
கொல்கிறாய்
இவள்
உன் பார்வையில்
ஒரு பூவாகிறாள்
நீ என்றாலே
சட்டென்று
பெண்ணாகிறாள்
அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா

போ
ம் ஹ்ம் ஹ்ம்
சீ
நான் என்ன
செஞ்சேன் அட
ஏதோதோ நீ
செய்ய
பார்க்கிறாய்
ஹே
ம் ஹ்ம் ஹ்ம்
சொல்லு
ம் ஹ்ம்
அது பட்டால்
என்ன
கெஞ்சாமல்
என்னை கெஞ்சக்
கேட்கிறாய்
அடி முத்தத்திலே
இதழ் கைதாகுமே
அதில் மின்சாரம்
உன்டாச்சு
கண்ணோரமே

அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா
உன்னை நானும்
இடையினில்
மீட்டவா
உனதாக உணர்ச்சிகள்
காட்டவா
உறுத்தாமல் உதடுகள்
மூட்டவா



Jaihind 2 - Adada Nenjil

Followers