Pages

Search This Blog

Tuesday, May 29, 2018

கோலமாவு கோகிலா - எதுவரையோ எதுவரையோ

எதுவரையோ எதுவரையோ
இந்த வழியே எதுவரையோ
இருள் அணியாதோ

விதியோ தலை விதியோ
இந்த கதியே தலை விதியோ
துயர் மறையாதோ

மறுபடி நிலா பொழியாதோ
மறுபடி நிலா பொழியாதோ
நிறையாதோ

நிழல் தரும் கணா விரியாதோ
நிழல் தரும் கணா தெரியாதோ
விரியாதோ
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே

பாரம் வந்து பாரம் வந்து சேர
யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்
அழுதிடவே பழகுகிறேன்

வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்
கரை வருமா இறங்குகிறேன்

விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
உர நகராதோ
அடைபடும் புறா நகராதோ உயராதோ

காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே



Kolamavu Kokila - Edhuvaraiyo

குலேபகாவலி - சேராமல் போனால் வாழாமல் போவேன்

மழைப் பொழிந்திடும் நேரம்
ஒரு குடையினில் நாமும்
நடப்பதை எதிர் காணும்
கனவுகள் பிழையா?

வரம் ஒன்றுக் கொடு போதும்
கலவரங்களும் தீரும்
தனி மரம் என நானும்
இருப்பது முறையா?

என் தாரகை ...
நீ தானடி
கண் விழியால்
கொல்லாதடி
தள்ளாதடி
கை விரலால்

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே ...

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே .....

நடு வெயிலில்
கடல் கரையில்
படகடியில்
இணைந்திடவா
நடு இரவில்
அடை மழையில்
சாலை வழியில்
இணைந்திடவா

ஜன்னல் வழியில்
மின்னல் புகுந்த
நொடிகளிலும்
இணைந்திடவா
கட்டில் அறையில்
காலை வரையில்
போர்வை சிறையில்
இணைந்திடவா

நீ இன்றி நானும்
நான் இன்றி நீயும்
வாழும் வாழ்க்கை என்னடா
அன்பே நீயும் சொல்லடா

நீர் இன்றி வானும்
வான் இன்றி நீரும்
இருந்தால் உலகம் ஏதடி
பெண்ணே புரிந்து கொள்ளடி

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
என் அன்பே....

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
என் அன்பே....

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே....

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே....



Gulaebaghavali - Seramal Ponal Vazhalam

குலேபகாவலி - ஆர்ட்டுக்குள்ள ( Heartukulla ) பச்ச குத்தியே

ஏய் 
எனக்கு உன் மேலதான்
உனக்கு என் மேலதான் 
ஏதோ ஒன்னே ஒன்னு இருக்கு இருக்கு

லைட்டா புத்தி வர 
லூசா சுத்தி வர
ஓகே சொல்லுரியா எனக்கு எனக்கு


ஆர்ட்டுக்குள்ள ( Heartukulla ) பச்ச குத்தியே
போகாத யா பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம்
பச்ச பச்ச பச்சக் கொடியே

ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே
போகாத யா பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம்
பச்ச பச்ச பச்சக் கொடியே....

என் பச்சக் கிளியே
என் பச்ச பச்ச பச்சக் கொடியே

என் பர்ஸ்டு லுக்குலயே (Firstu looku)
உசுர விட்டேன்
பெஸ்ட்டு பிரண்ட எல்லாம் 
கலட்டி விட்ட

அய்யோ பாவமுன்னு 
ஓகே பன்ற 
இல்ல இல்ல இல்ல 
திங் பண்ணி சொல்ற

அடடா கண்ணம்மா
என்ன பொன்னம்மா
ஹாட்டு வாட்டரதா 
ஆர்ட்டுக்குள்ள ஊத்திட்டியே மா

வா வா செல்லம்மா
Feelings என்னம்மா
லவ்வ சொல்றதுக்கு
லாஜிக் எல்லாம் பாக்குறியே மா

எனக்கு உன் மேலதான்
உனக்கு என் மேலதான்
ஏதோ ஒன்னே ஒன்னு இருக்கு இருக்கு

லைட்டா புத்தி வர
லூசா சுத்தி வர ஓகே சொல்லுறியா
உனக்கு உனக்கு

ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே.....
போகாத யா பச்சக் கிளியே

ஏய்
ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே
போகாத யா பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் 
பச்ச பச்ச பச்சக் கொடியே


ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே
போகாத யா பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் 
பச்ச பச்ச பச்சக் கொடியே

என் பச்சக் கிளியே
என் பச்ச பச்ச பச்சக் கொடியே...
என் பச்ச பச்ச பச்சக் கொடியே...
என் பச்ச பச்ச பச்சக் கொடியே....



Gulaebaghavali - Heartukulla Pachai Kuthiye

Friday, April 6, 2018

காதல் கோட்டை - வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!
வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு!

தடக் தடக்... டொடக் டொடக் ...

உன்னை நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்!
என்ன தேவை சின்னப் பொன்னே கேளம்மா
சிங்கப்பூரு சென்ரு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா?

ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்கும் நூறு முத்தம் தாறியா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென்று
என் மனசு துடிக்குதடி!
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ... ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா? .. ஓ
கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
பாசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா!

பேஸ் கட்டுல பெயர் அன்ட் லவ்லி
ஜாக்கட்லை லோக்கல் ரெய்ல்லிங்
குளோசப்லை லோவர் றிப்லை ஏனம்மா?
லாக்கெற்றுல லாரா சாமி நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
கெயர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி.. கட கட கடவெனக்
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ ...ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா



Kaadhal Kottai - Vellarikka Pinchu Vellarikka

காதல் கோட்டை - மொட்டு மொட்டு மலராத மொட்டு

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஹோய்...

தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்
மதன் தரும் சுகம் என உன் பார்வையை பார்த்தேன்
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
முன்னும் பின்னும் பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும்
இலக்கணம் எனதுடலே வா நீ வா
இலக்கியம் உனதுருவே தா நீ தா
தேவா.......

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம்
இளமையின் ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே தா நீ தா
தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு



Kaadhal Kottai - Mottu Mottu Malaratha Mottu

காதல் கோட்டை - சிவப்பு லோலாக்கு குலுங்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது



Kaadhal Kottai - Sivappu Lolakku Kulunguthu

காதல் கோட்டை - காலமெலாம் காதல் வாழ்க

காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

(காலமெலாம்)

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

(காலமெலாம்)

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

(காலமெல்லம்)



Kaadhal Kottai - Kalamellam Kadhal

Followers