Pages

Search This Blog

Monday, January 22, 2018

விக்ரம் வேதா - நீ போகாதே என்ன விட்டு

நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்கவிட்டுப்புட்டு
நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே  
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே  
உன்னாலே பெண்ணேப் பெண்ணே   (நீ போகாதே)
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
காலம் இங்கே தீரும் வரை
காக்கவச்சிப் போற
ஆசை அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
கொல்லாம அள்ளாம என்னக் கொல்லாத   (நீ போகாதே)
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்  
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற  
கேள்வி ஏதும் கேட்காமலே
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்  
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற  
கேள்வி ஏதும் கேட்காமலே
ஆகாசமா அசப்போடும்
உன் கூட நான் சேர்ந்தா
காலமெல்லாம் வாழ்க்க மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீர்வில்ல   (நீ போகாதே)



Vikram Vedha - Pogatha Yennavittu

தானா சேர்ந்த கூட்டம் - எங்கே என்று போவது

எங்கே என்று போவது
யாரை சொல்லி நோவது.

ஏதோ கொஞ்சம் வாழும் போதே
தோற்று தோற்று சாவது.

ரத்தம் கேட்கும் பேய் இது
ராத்திரி பகலா மறையுது.

உறவே இல்லை ஒவ்வொன்றாக
கூறு போட்டு கொல்லுது.

கேட்பதே பிழை என்னும் விழியெலே
உண்மை இல்லை நாட்டில்.

தவருததே மழை தினம் பாடம் பாத்து
மூழுகின்றோம் சேற்றில்.

ஒரு உயிருக்கு இங்கு விலை என்ன
வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன.

தினம் நானும் வெய்யில் காணும் கனவுகள்
கருகி போவும் நிலை என்ன.

ஒரு திறமை இருந்த போதாதா
இடம் தேடி கொண்டு வராதா\.

இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே
கெட்ட வார்த்தை ஆகாதா.

மொழி தெரிந்தும் அலைகின்றோம்
தனியாக வளர்கின்றோம்.

தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்.

மொழி தெரிந்தும் அழைகின்றோம்
தனியாக வளர்கின்றோம்.

தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்.

ஆட்சிகள் மாறலாம் சாட்சிகள் மாறுமா
சூழ்நிலை மாறலாம் சூழ்ச்சிகள் மாறுமா.

இனி நாம் ஒரு தாயம் கீச்சியே ஏணி ஏறனும்
எதிரி அடி வாங்கி வாங்கி ஓடி போகணும்.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

தீதும் நன்றும் சேர்ந்தே வாழும் ஊரில்
தீமை மட்டும் ஓங்கி நிற்க்கும் வேளை.

காற்றும் கூட காசை கேட்கும் காலம்
வந்தால் நாமும் என்ன நாமும் செய்ய கூடும்.

இது தானா சேர்ந்த கூட்டமடா
இது தானா சேர்ந்த கூட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.



Thaanaa Serndha Koottam - Engae Endru Povathu

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.



Thaanaa Serndha Koottam - Sodakku Mela

வேலைக்காரன் - இறைவா என் இறைவா

இறைவா என் இறைவா
எனை தெரியும் மனம்
போர்க்களம் ஆனதேன்.

இறைவா என் இறைவா
என் இரு கால்களே
பாதையே மேயுதே.

எனை படைத்தவன்
நீ தானையா.

உயிர் வளர்த்ததும்
நீ தான் ஐயா.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

நான் வாழவ
நான் வீழாவ
என் செய்வது நீ சொல்லு வா.

உயிரே என் உறவே
உனை விட்டு போவதும் சாவதும்
ஒன்றுதான்.

இரவே என் பலே
இனி வரும் நாளெல்லாம்
பூமியில் ஒன்றுதான்.

துணை இருந்திடும் என் கடலே
இலக்கணம் எதிர் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

காடு மழை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்.

தொய்வு பெரும் காதலில்
ஆடம்பரம் போகலாம்.

நான் விரும்பி அடையும்
பொன் சிலையே சிலையே.

நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே.

ஓ நிரந்தரம் என ஏதும் இல்லை
மிகை விடும் நிலை நாளை இல்லை.

இரந்திடும் வரை கூடாதாடா
எரி மலை என்றும் நீ தானடா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.



Velaikkaran - Iraiva En Iraiva

வேலைக்காரன் - வா வேலைக்காரா

உன் கை நாளை உயராதோ
உயராதோ உயராதோ.

வேர்வை உன் பேர் எழுதாதோ
எழுதாதோ எழுதாதோ.

ஏணி தூக்கிட உன் தொழிலே
வா வேலைக்காரா.

தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே
வா வேலைக்காரா.

மெய் மட்டுமே உன் மதமா யார் சொன்னது
வா வேலைக்காரா.

எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும்
வா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

கண் தூங்கி விடுமா
கண்டதில்லை துளியும் ஓய்வு.

ஓடோடி உழைத்ததும் நகராமல் வேர்க்கும்
அவனின் வாழ்வு.

தன்னாசையில் மண் வீசியே
நாம் ஆசையை கொடியேற்றினான்.

எதிர்காலமே நமதாகவே
புது பூமியில் குடியேற்றினான்.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வழிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா.



Velaikkaran - Vaa Velaikkara

வேலைக்காரன் - இதயனே என்னை என்ன

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

வானம் விரிகிறதே
நாம் என் கோண மாற்று.

எல்லாம் புரிகிறதே
நீ என் சிணுங்கல் ஆற்றி.

பொய்கள் நீங்குதே
உண்மை தோன்றுதே.

உன்னை தோழனென்று
என் இதழ்கள் கூறுதே.

பூமி மாறுதே வண்ணம் ஏறுதே
உன்னை காதல் என்று
எந்தம் நெஞ்சம் கூறுதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

எதிரும் பூதிரும் உன்னை என்னை
நான் நினைக்க
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்.

சருகு சருகு என்று நான்
உதிர்ந்து விழும் போதும்
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்.

முதல் முறை எனது ஆளை தாண்டி
தொலை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ.

முதன் முறை எனது நெஞ்சம் கண்ணு
உன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.



Velaikkaran - Idhayane Ennai Enna

வேலைக்காரன் - எழு வேலைக்காரா

எழு வேலைக்காரா
எழு வேலைக்காரா இன்றே இன்றே.

ஓயாதே
சாயாதே
வாய் மூடி
வாழாதே.

எழு வேலைக்காரா இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

வேர்வை தீயே
தேசம் நீயே.

உன் சொல் கேட்டே
வீசும் காற்றே.

ஓயாதே
தேயாதே
சாயாதே..

ஆராதே
சோராதே
வீழாதே.

போராடு.

எழு வேலைக்காரா இன்றே இன்றே போராடு.
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

போராடு
போராடு
போராடு
போராடு.

முடியாத செயல் எதுமே
புவி மீது கிடையாது
எழுந்து வா புயலை போலே.

பலம் என்ன புரியாமலே
பணிந்தோமே குனிந்தோமே
நிமிர்ந்து வா
மேலே மேலே.

ஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு
அதை முறையே பயனுற
வாழும் வாழ்க்கை ஆக்கு.

உழைப்பவனே
எழுதிட வேண்டும் தீர்ப்பு.

விதைத்தவனே
பசியென போனால் எங்கோ தப்பு

போராடு
ஓயாதே தேயாதே சாயாதே. போராடு.

ஆராதே போராடு
சோராதே வீழாதே போராடு.

போராடு
எழு வேலைக்காரா இன்றே இன்றே.

போராடு
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

வேர்வை தீயே
தேசம் நீயே.

உன் சொல் கேட்டே
வீசும் காற்றே
போராடு.

ஓயாதே போராடு
தேயாதே சாயாதே. போராடு.

ஆராதே சோராதே போராடு
வீழாதே போராடு.

போராடு
போராடு
போராடு
போராடு.

ஓயாதே
சாயாதே
வாய் மூடி வாழாதே.



Velaikkaran - Ezhu Velaikkara

Followers