உன் கை நாளை உயராதோ
உயராதோ உயராதோ.
வேர்வை உன் பேர் எழுதாதோ
எழுதாதோ எழுதாதோ.
ஏணி தூக்கிட உன் தொழிலே
வா வேலைக்காரா.
தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே
வா வேலைக்காரா.
மெய் மட்டுமே உன் மதமா யார் சொன்னது
வா வேலைக்காரா.
எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும்
வா வேலைக்காரா.
உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.
வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.
கண் தூங்கி விடுமா
கண்டதில்லை துளியும் ஓய்வு.
ஓடோடி உழைத்ததும் நகராமல் வேர்க்கும்
அவனின் வாழ்வு.
தன்னாசையில் மண் வீசியே
நாம் ஆசையை கொடியேற்றினான்.
எதிர்காலமே நமதாகவே
புது பூமியில் குடியேற்றினான்.
உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.
வழிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.
உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.
வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.
வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா.
Velaikkaran - Vaa Velaikkara