Pages

Search This Blog

Friday, December 30, 2016

கோவா - இதுவரை இல்லாத உணர்விது

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை..)

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்..)

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே..)

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்..)

Goa - Idhu Varai

கோவா - ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்

ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்

முல்லையாரு மொதல் மொதலா முத்தமிடும் அந்த எடம்
எல்லைகள தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த எடம் (2)

ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்
-
வீரபாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா மங்கலமா

பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்து தந்த பாட்டு பொங்குதம்மா

பட்டிக்காட்ட விட்டுபுட்டு பட்டிணத்தில் குடி புகுந்து
மெட்டுக்களை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு

ஆத்தி என்ன சொல்ல அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு

அப்பரிந்து இப்பவர எங்களுக்கு என்ன குற
எப்பொழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை
-
ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்
-
அள்ளி உரல நெல்ல போட்டு அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனத்தான் பாத்துகிட்டு அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நாம நெல்லு குத்துகிற அழக கண்டு மச்சான் நேருல வருத பாருங்கடி
அவன் நேருல வருத பாத்துபுட்டு நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி
-
மேற்கு மல சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோத்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேக்கும்

நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அரிய கேட்கும் போது உற்சாகமாக்கும்

அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அரைவணப்பு
சத்தியமா நிச்சயமா அஸ்திவாரம் எங்களுக்கு

தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு

வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகள தீர்ப்பது போல் பாரு எங்க கத
-
ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்

முல்லையாரு மொதல் மொதல முத்தமிடும் அந்த எடம்
எல்லைகள தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த எடம் (2)

ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்

Goa - Yezhezhu Thalaimuraikkum

7G ரெயின்போ காலணி - ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்

ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை எங்கு மாறும்

என் பின்னங்கழுதிலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
ஏன் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிகொண்டு சாக

ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை எங்கு மாறும்
மெய்யா பொய்யா என் தேகம் இங்கே
பையா பையா உன் வீரம் எங்கே

கட்டில் கட்டில் அது தேவையில்லை
கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை

காமம் இல்லா காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிற்க இது கோயில் இல்லை
வண்டு வரா பூக்கள் அது பூக்கள் இல்லை
ஆதி வாசி ஆணும் பெண்ணும் வெட்கபடவில்லை

மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சுடும்

முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும்
முகத்திலெ வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்
மறு விழி உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்
மறு கை உன்னை தேடும்
என் ஈர கூந்தல் உள்ளே
உன் விரல் வந்து தேட
என் காது மடல் எல்லாம்
உன் உஷ்ண முத்தம் கேட்க
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிகொண்டு சாக

7G Rainbow Colony - January Madham

அறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை

இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம்
புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்
எனக்குள் இவன் மெல்ல இவனுக்குள் நான் மெல்ல
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை
வந்து விட்டதா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்
எப்படி புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ
வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானே சொல்லிவிட்டால் நானே ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

Arinthum Ariyamalum - Konjam Konjam

பாலா - பூ பூவாய் புன்னகைக்கும் இவள்

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,

புல்வெளிகளில் நீ போனால்,
வென் பனிதுளி கால் கீறும்,
நம் இதயங்கள் நான்கோடும்,
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே,

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,
எங்கள் இல்லத்திலே, இன்ப நாடகம்தான்,
இங்கே தேவையில்லை தொலைக்காட்சி,
எங்கள் உள்ளத்திலே தினம் பூ மழைதான்,
நாங்கள் செல்வதில்லை மலர்காட்சி,
மழை வந்தால், அதில் நனைவோம்,
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க,
வெய்யில் வந்தால், அதில் அலைவோம்,
தந்தை அரட்டும் இனிமை ரசிக்க,
கால்கொண்ட ரோஜா, துள்ளி துள்ளி வந்து,
தூணுக்கு பின்னால் நின்று சிரிக்கிறதே,
—-
பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,

புல்வெளிகளில் நீ போனால்,
வென் பனிதுளி கால் கீறும்,
நம் இதயங்கள் நான்கோடும்,
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே
—-
தாய் கட்டுகின்ற, நூல் சேலையிலே,
யார் போர்த்தயென்று அடம்பிடித்தோம்,
மொட்டைமாடியிலே, ஒரு தட்டினிலே,
நெய் சோறு வச்சு உயிர் ருசித்தோம்,
ஒரே ஒரே மின் விசிறி,
அதன் அடியில் தூங்கி கிடைப்போம்,
இன்னும் இன்ப தந்தை தோளில்,
சிறு குழந்தையாக இருப்போம்,
பூமியில் சொர்க்கம், உள்ளதென்று சொன்னால்,
வேறெங்கும் இல்லை, அது எங்கள் இல்லமே…
—-
பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை,

புல்வெளிகளில் நீ போனால்,
வென் பனிதுளி கால் கீறும்,
நம் இதயங்கள் நான்கோடும்,
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே,

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்,
எங்கள் வீட்டு புது கவிதை,
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை,
இவள் எங்கள் கை குழந்தை

Bala - Poo poovai

பாலா - தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே

தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

தொடங்கினால் கூசும் இடங்களால்
நகங்களை கீறும் படங்களா?

தேகம் என்பதேன்ன? ஓர் ஆடை கோபுரம்
ஆடை வெல்லும்போது ஓர் காமன் போர்வரும்

குரும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது

கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது …

என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே

நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே

இருவரே பார்க்கும் படவிழா
திரையிடும் மோக திருவிழா

காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு

நேர் மரம் சாய்க்காமல்
முதல் புயல் முடியாது

காதல் தீவர தீவர வேர்வையில் முழுகுது

என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே

Bala - Theendi Theendi

போஸ் - வைத்த கண் வைத்தது தானோடி

வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள் தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்
அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூப்பூக்க
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே
(வைத்த கண்..)

ஹா யாரோ எந்தன் மனசின் நடுவிலே
ரோஜா தோட்டம் வைத்தது
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்
உந்தன் கால் தடம்

ஆ.. யாரோ எந்தன் உயிரின் அறையிலே
கவிதை புத்தகம் படித்தது
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே
உந்தன் வாசனை

உன் பேரழகு கொஞ்சம்
உன் பேச்சழகு கொஞ்சம்
என் பருவத்துக்குள் வந்து
எனை பஸ்பம் செய்யுதடா

உன் கண்ணழகு கொஞ்சம்
உன் முன்னழகு கொஞ்சம்
என் இரவுக்குள்ளே வந்து
துளியாய் இறங்கி கடலாக மாறியதே

தந்திரா கண்களில் என்னென்ன 
தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் 
பத்திரம் ஆனாயோ

இந்த சிரிப்பு இந்த சிரிப்பு தான்
என்னை கொள்ளை கொண்டது
இந்த கண்கள் இந்த கண்கள் தான்
கலகம் செய்தது

இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள் தான்
எந்தன் அணுவில் நுழைந்தது
இந்த செழுமை இந்த செழுமைதான்
வயசை ஏத்துது

நீ முத்தம் மொத்தம் வைத்தே
என் கண்ணம் பள்ளம் ஆச்சு
உன் அத்துமீரல் பார்த்து
என் பெண்மை திண்மை ஆச்சு

நீ என்னை தீண்டி தீண்டி
என் ஸ்வாச பையில் ஏனோ
ஒரு வெப்ப பந்து நின்று
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி

தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ
ஆ வெண்ணிலா வேர்க்குது பாரம்மா
வேர் வரை பூக்குது ஏனம்மா
சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா
(வைத்த கண்..)

Bose - Vaitha Kann

Followers