Pages

Search This Blog

Thursday, December 1, 2016

கத்தி - பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள்

You know what
Guess who's back
We back baby
We back, We back, We back back back

ஆ.. பெண்ணே பார் ஆ.. ஒரு முத்தம் தா ஆ…
இந்த பக்கம் வா ஆ.. என்னை அணைத்திட வா ஆ..
பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லம்மா
என் நெஞ்சம் துடிக்குது உன்னை நினைத்திட
கைகள் பிடித்திட மனசுக்குள் துடிக்குது உண்மைதான்
பைத்தியம் பிடிக்கிது வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்
பெண்ணே எந்தன் உலகம் நீதான்
நான் அந்த நிலவைப்போல் சுற்றி வரவா
உன்னை நினைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க்க
அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தியடைவாய்
விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே நான் உன்மீது கொண்டிடவா
உன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டுத்தான் மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா
என்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் பிறந்துன்னை சேர்ந்திடுவேன்
என்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம்தான் தாங்காதே உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் ….
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும் லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா
அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்
எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க
முகத்தில் இருக்கும் சிரிப்பு
அடி உள்ளுக்குள் என்னடி மொறப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இதுதான் என்னோட கருத்து
என்னைத்தான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்தென்னை தாக்க
மீண்டும் நான் உன்னையே பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே உலகம் மறந்ததே
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் ….
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

மலர்ந்ததே உலகம் மறந்ததே
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
மனமே …

Kaththi - Pakkam Vanthu

காதல் கவிதை - ஆளான நாள் முதலா யாரையும்

மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...
வேணான்னு சொல்லுறீங்களே 
சும்மா வெறும் வாயை மேல்லுரீகளே 
ஆடியிலே கட்டிக்கிட்ட சித்திரைக்கு புள்ள வரும் 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் வச்சானே 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் வச்சானே 


உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை 
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல 
வேணாண்டி விட்டு விடடி 
நான் தவிசாக்க தண்ணி குடுடி 
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமின்னு 
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லரிக்க போகையில புள்ளகுடி தண்ணியில 
உன் முகத்தை பார்த்து புட்டேன் 
ஓடி வந்து சேர்ந்து புட்டேன் 
என் பாசம் தெரியாது மாமா 
அஹா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா 
அஹா 
கொல்லையில மாங்காய் மரம் 
கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு 
காவல்காரன் தூங்கயில கல் கடிச்சு மாம்பழத்தை 
அறியாம பரிசாதான் இனிக்கும் 
அடி அதுக்குள்ளே கடிசாதான் ருசிக்கும் 
அறியாம பரிசாதான் இனிக்கும் 
அடி அதுக்குள்ளே கடிசாதான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா 
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா 
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன் 
ராசா என் ராசா... 

யம்மா...
உன்னை நான் கட்டிகிட எப்பவும் நெனச்சதில்லை 
கல்ல கட்டி தண்ணிக்குள்ள 
முங்குனவன் யாருமில்ல 

காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசை பட்டே 
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்தி கிட்டே
முட்டாளா இருக்கேடி மானே 
அடி ஒட்டாது என் வாழ்கை தானே 
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே
அடி ஒட்டாது என் வாழ்கை தானே 
ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ 
செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ 
நீ மட்டும் சரிதானா மாமா 
ஆ 
என் நெனப்பதான் நீ பாரு மாமா 
ஹ்க்கும் 
நீ மட்டும் சரிதானா மாமா 
என் நெனப்பதான் நீ பாரு மாமா
உன் வாயை கொஞ்ச மூடிக்கடி வாரேன் 
நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன் 
நான் நெனச்சா மலையை ஒடிப்பேன் 
வாரேன் நான் வாரேன் 


மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை 
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி 
ஆகாது ஆகாது மச்சானே 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 
ஆகாது ஆகாது மச்சானே 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

Kadhal Kavithai - Aalana Naal Mudhala

தர்மத்தின் தலைவன் - வெள்ளி மணி கிண்ணத்த்தில

வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக் கொள்ளப் போறான் உன்ன அழகாகத் த்தான்
கில்லிக்கொள்ளப் போறான் இப்போ மெதுவாகத் த்தான்

வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தானா தான்

பார்த்துப் பார்த்துப் பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பூவும் பூத்து பிஞ்சாகித் தான்
காயாகி போனவ நானே
பிஞ்சானாதென்ன காயானதென்ன
அஞ்சாமல் கூறடி நீயும் தான்
அப்பாவி மாமா ஆராய்ச்சி வேணாம்
இப்போது எடுங்க நேரம் தான்
மெய்யோடு நானும் மெய்யாகச் சேர
மேலாடை போல ஒண்ணாக கூட
வரவேண்டும் ஒரு நேரம்
அதச் சொல்லு மானே

அள்ளிக் கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கிள்ளிக் கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

பாலும் தேனும் இப்போது தான்
ஒண்ணாகச் சேர்ந்தது இன்று
பாசம் அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த் தது இன்று
எப்போதும் உன்னை நீங்காமல் வாழும்
நன் நாளை கேட்பது நானும் தான்
குற்றால காற்றும் சங்கீதம் பாடும்
இப்போது என் மனம் போலத் தான்
அன்புள்ள நெஞ்சம் தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத ஒரு கேள்வி இல்லை

அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

வெள்ளிமணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்

அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி

அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

Dharmathin Thalaivan - Velli Mani Kinnathiley

தர்மத்தின் தலைவன் - முத்தமிழ் கவியே வருக

முத்தமிழ் கவியே வருக
முக்கனி சுவையே வருக
முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..

காதல் தேவன் மார்பில்
ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன்
நெஞ்சில் நான் ஆடுவேன்

கண்கள் மீது ஜாடை
நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து
நான் பாடினேன்

மூடாத தோட்டத்தில்
ரோஜாக்கள் ஆட
தேனோடு நீ ஆட
ஓடோடி வா

காணாத சொர்க்கங்கள்
நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி
நீ ஓடி வா

காலங்கள் நேரங்கள்
நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..

ஆ.. முத்தமிழ் கலையே வருக 
முக்கனிச் சுவையும் தருக

ஹம்மிங்

சங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம் சிந்து

நெஞ்சம் எந்தன் மஞ்சம்
அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம்
என்று புது தாளம் சிந்து

வார்த்தைக்குள் அடங்காத
ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை
நீ கொண்டு வா

என்றைக்கும் விளங்காத
பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல்
நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள்
நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..

ஆ..முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக

காதலென்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக

முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..

Dharmathin Thalaivan - Muthamizh Kaviyae

தர்மத்தின் தலைவன் - தென்மதுரை வைகை நதி

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது (இசை)
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி


நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை

தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை

கண்ணொடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்

இந்த நேசம் பாசம்
நாலும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு

பூவை சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே

உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்

இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நில

இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி

Dharmathin Thalaivan - Thenmadurai Vaigai Nadhi

ஆனந்தம் - பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு

தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிடும்
செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்சி
இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

Aanandham - Pallangkuzhiyin

ஆனந்தம் - ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல்

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பனிவாடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்திருபோம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதை போல வாழ்ந்திருபோம்
எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே
அடை மழையாக பெய்யும் சந்தோசம்

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்

Aanandham - Aasai Aasaiyai

Followers