Pages

Search This Blog

Thursday, December 1, 2016

தர்மத்தின் தலைவன் - வெள்ளி மணி கிண்ணத்த்தில

வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக் கொள்ளப் போறான் உன்ன அழகாகத் த்தான்
கில்லிக்கொள்ளப் போறான் இப்போ மெதுவாகத் த்தான்

வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தானா தான்

பார்த்துப் பார்த்துப் பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பூவும் பூத்து பிஞ்சாகித் தான்
காயாகி போனவ நானே
பிஞ்சானாதென்ன காயானதென்ன
அஞ்சாமல் கூறடி நீயும் தான்
அப்பாவி மாமா ஆராய்ச்சி வேணாம்
இப்போது எடுங்க நேரம் தான்
மெய்யோடு நானும் மெய்யாகச் சேர
மேலாடை போல ஒண்ணாக கூட
வரவேண்டும் ஒரு நேரம்
அதச் சொல்லு மானே

அள்ளிக் கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கிள்ளிக் கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

பாலும் தேனும் இப்போது தான்
ஒண்ணாகச் சேர்ந்தது இன்று
பாசம் அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த் தது இன்று
எப்போதும் உன்னை நீங்காமல் வாழும்
நன் நாளை கேட்பது நானும் தான்
குற்றால காற்றும் சங்கீதம் பாடும்
இப்போது என் மனம் போலத் தான்
அன்புள்ள நெஞ்சம் தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத ஒரு கேள்வி இல்லை

அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

வெள்ளிமணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்

அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி

அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்

Dharmathin Thalaivan - Velli Mani Kinnathiley

Followers