Pages

Search This Blog

Friday, November 25, 2016

குத்து - எனை தீண்டி விட்டாள்

ஆண் : எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்
என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் மேடு எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்

Kuththu - Ennai Theendi Vittai

நெஞ்சில் ஜில் ஜில் - உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்

ஆ: நெஞ்சில் ஜில் ஜில்..
எனக் காதல் பிறக்கும்..
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்..
அழியாது காதல்..

ஆ: உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாத சுவடு

பெ: தீராத தேடல் இது
தித்திக்கும் தூரல் இது..

ஆ: (உனக்காகத்தானே..)

பெ: தேவதைப்போல வந்து காதல் இறங்கும்
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்

ஆ: புரியாது பெண்ணே காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்..
த ன னா ன னா...

பெ: வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்

ஆ: காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்
(உனக்காகத்தானே..)

பெ: காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

ஆ: சலவைக்கல் சிலையே பூஜிக்க வா..
ரகசிய பூவாய் தனனானனா...

பெ: உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது

ஆ: பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)

Nenjil Jil Jil - Unakkagathaane Uyir Vaazhgiren

உதயகீதம் - பாடு நிலாவே தேன் கவிதை

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர கூடும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே



Udaya Geetham - Paadu Nilavae Then Kavithai Poo Malare

உதயகீதம் - சங்கீத மேகம் தேன் சிந்தும்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

லலல… லலல…
லல… லல… ல…

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே…. ஹோ…..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே…. ஹோ…..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே… ஒ…
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்



Udaya Geetham - Sangeetha Megam

உதயகீதம் - தேனே தென்பாண்டி மீனே

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)



Udhaya Geetham - Thene Thenpandi

நாட்டாமை - நான் உறவுக்காரன் உறவுக்காரன்

ஆ: நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெ: நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

ஆ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

பெ:ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

ஆ: (நான் உறவுக்காரன்..)

ஆ: வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம்
இன்னும் விளக்கம் தேவையா?
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க
ஒரு வெளிச்சம் தேவையா?

பெ: விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ
என்று வழியா போறியா?
விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்பா நீ
பிழிய போறயா?

ஆ: சொந்தக்கார பூவே சொல்லிக்கொஞ்சம் தாரேன்

பெ: சொல்லி கொடு மாமா அள்ளிதற வாரேன்

ஆ:(நான் உறவுக்காரன்..)

பெ: உன்ன நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது
உந்தன் நெனப்பில் இந்த பட்டு புடவ சும்மா வழுக்கி விழுகுது

ஆ: எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது
அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது

பெ:அஞ்சு மணி வந்தா நெஞ்சுக்குள்ள பாட்டு

ஆ: பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு

பெ: (நான் உறவுக்காரி..)

ஆ: (நான் உறவுக்காரன்..)

பெ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

ஆ: ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

Nattamai - Naan Uravukaaran

Thursday, November 24, 2016

சிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

Sigaram - Vannam Konda

Followers