வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை
(வண்ணம்)
பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை
(வண்ணம்)
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்
(வண்ணம்)
Sigaram - Vannam Konda