Pages

Search This Blog

Monday, November 21, 2016

ஜானி - காற்றில் எந்தன் கீதம்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ளே ஒரு வீணை ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடதோ
கண்கள் எங்கும் நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

Johnny - Kaatril Endhan

அள்ளி தந்த வானம் - வாடி வாடி நாட்டுக்கட்ட

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா மாட்டிக்கிட்ட 

ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை 
காள வருதே மல்லுக்கட்ட 

நீதானே கண்ணுக்குள்ள கொட்டி வச்ச நீ தானே ஆ… 

நீ தானே கன்னத்திலே கன்னம் வச்சி 
தீண்டாதே ஹோய் 

ஆளில்லா ஆத்தங்கரை 

அதுக்கு இப்ப என்னாங்கிறே (ஏ வாடி)

கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே 

ஏ விடிய சொல்லி கூவுன்னு 
சேவல் குழம்பில கொதிக்கிறதே 

என் மாமா என் மாமா 
என் மூச்சாலே முட்டித்தள்ளாதே 

நுனி நாக்கால பொட்டு வச்சா தட்டி தள்ளாதே 

என் மாமா காதோரம் மூச்சுப்பாட 

சூடேறும் கம்மாக்கெடை (ஏ வாடி)

மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா 

ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா 

அடி ஆத்தி அடி ஆத்தி 
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ 

அட உன் கூத்தும் கையை தட்டும் மூச்சி முட்டாதோ 

அடி ஆத்தி ஆளில்லா ஆத்தங்கரை 

அதுக்கு இப்ப என்னாங்கிறே (ஏ வாடி)

Alli Thandha Vaanam - Vadi Vadi Nattukkattai

அள்ளி தந்த வானம் - கண்ணாலே மியா மியா

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

காதலும் சொல்லவும் அய்யா என் கவி கண்கள் அய்யா 
எங்குமே உந்தன் கையா இதனை மூட தேவையா 
கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

பாதிக்கண்ணால் மூடும் மீதிக் கண்கள் தேடும் 
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ 

பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும் 
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ 

முதல் முதலில் உன் ஹோய் நேரம் பேரின்பமாய் 

உயிரினில் நுழையும் ஹோய் நேரம் இதுதான் 

ஹேய் கொஞ்சம் கம்மாயிரு பக்கம் வந்தால் வம்பாயிடும் 

இமை ஒட்டி கிள்ளும் இதழ் திட்டி தள்ளும் 

விரல் கட்டி கொள்ளும் ஒரே நிழல் நெஞ்சம் 

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

தீயை தின்னும் நேரம் தேகம் எங்கும் ஈரம் 
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ 

காமன் கட்டில் ஆடும் மூச்சின் வெப்பம் கூடும் 
ஆடை பற்றிக் கொள்ள சுடுமல்லோ 

தலையணை முழுதும் ஹோய் கூந்தல் அலைதான் 

இருபது விரலும் ஹோய் தீயின் இணைதான் 

ஹேய் என்னை தீண்டாதிரு 
தொட்டால் என்னை தள்ளாதிரு தள்ளாதிரு 

கண்கள் ரெண்டும் பள்ளம் வேர்வை கொட்டி வெல்லும் 

கட்டில் வெப்பம் செல்லும் ஒரே நிழல் நெஞ்சம் 

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா…

Alli Thandha Vaanam - Kannale Miya Miya

அள்ளி தந்த வானம் - சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணும்

சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணும்… 
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்… 
குடிக்கிற தண்ணீர் காசே கொசுவைவிரட்ட காசே 
அர்ச்சனை சீட்டும் காசே திருப்பணி சீட்டும் காசே 
ஆட்டோ மீட்டர் காசே திருட்டு வீடியோ காசே 
போலி சாமியார் காசே அட பொணத்தில் நெத்தியிலும் காசே 
காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து மறைவா வித்தா காசே 
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில் 
தொட்டதுக்கெல்லாம் காசே 
காசே காசே காசே… (சென்னை)

பூமி வட்டமா ஏகாசு வட்டமா 
நாடே சுத்துதே நாகரீகம் சுத்துதே 
கடற்கரை காதல் காசே கவர்மெண்ட் மாப்பிளே காசே 
நீலப்படமும் காசே அட சிவப்பு விளக்கும் காசே 
எல்கேஜி-யும் காசே எம்.பி.பி.எஸ். காசே 
இட்லிய வித்தாலும் காசே உன் கிட்னிய வித்தாலும் காசே 
கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால் 
கர்ப்பத்தை கலைக்கவும் காசே 
காசே காசே காசே… (சென்னை)

தீம்தனக்கு தீன் தீம்தனக்குதீன்… 

கட்சி நூறுடா கொள்கை இல்லேடா 
கரன்சியை நீட்டுடா கைமேல போடுடா 
ஊர்வலம் போனா காசே வன்முறை செஞ்சா காசே 
சாதி சங்கம் காசே ஆ… சந்தன மரமும் காசே 
கூட்டணி சிறந்தா காசே தீக்குளிக்கவும் காசே 
பொறம்போக்கு நிலமும் காசே 
அட இலவசம் கூட காசே 
ஏ கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க 
யூதாஸ் வாங்கினான் காசே 
காசின் மதிப்பை அறியா மனிதன் உலகில் செல்லா காசே 
காசே காசே காசே…… (சென்னை)

Alli Thandha Vaanam - Chennai Pattinam

நேசம் - ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

பெண் : ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

பெண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா

பெண் : உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஆண் : ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா (இசை)

பெண் : ஆளை முன்னும் பின்னும் ஆசை பின்னும் பின்னும்
காதல் பெண்மைக்கு இங்கு சோதனை (இசை)

ஆண் : தேடும் இன்னும் இன்னும் நூறு வண்ணம் வண்ணம்
மோகம் சுட்டதென்ன ஜீவனை

நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை
பெண் : மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேற யார் துணை

ஆண் : காதலில் நாணம் முடிந்துவிடாது

பெண் : ஆ..ஆ..ஆ ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

பெண் : கைகள் பட்டு பட்டு ஆசை மொட்டு விட்டு
தேகம் விட்டு விட்டு கூசுதே (இசை)

ஆண் : பெண்மை கட்டு பட்டு நாளும் வெட்கப்பட்டு
நாணம் தொட்டு தொட்டு பூசுதே

பெண் : ஏங்கும் தலையணைக்கு ஆளை தேடினாய்
ஆண் : தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய்
பெண் : பனி துளி ஈரம் பூவுக்குள் தாவும்

ஆண் : ஆ..ஆ..ஆ ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

பெண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா

பெண் : உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

பெண் : ஓ ரங்கா நாதா

ஆண் : ஸ்ரீரங்க நாதா

Nesam - O Ranganatha

பூமகள் ஊர்வலம் - சின்ன வெண்ணிலவே என் மார்பை

சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்   கட்டிக்கொள்  
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
நிலாவே  நீங்கிடாதே 
அழகு  மகள்  மேனியை  கண்டேன் 
வாச  தாமரை  அங்கம்  அங்கம் 
தாமரையே  தலையணை  ஆனால் 
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம் 
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம் 
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும் 

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 

பள்ளம்  எங்கே  உள்ளது  என்று  வெள்ளம்  அறியாதா 
இன்பம்  எங்கே  உள்ளது  என்று  கைகள்  அறியாதா 
ஹையோ  இந்த  பெண்ணுக்கு  என்ன  ஆசை  கிடையாதா 
ஆளிங்கனம்  செய்தும்போதே  அள்ளி  உடையாதா 
நீ  எந்தன்  மேடை  அல்லவா 
நான்  உந்தன்  ஆடை  அல்லவா 
நெஞ்சோடு  மின்சாரம்  பாய்ந்து 
கண்மூடி  சாய்ந்து 
கை  சேரும்  நாள்  அல்லவா 
நீயும்  நானும்  இன்று  அடி  ஒன்று 
என்  தனிமையின்  பொருளே  வா 

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 


அன்பே  என்னை  தூண்டினால்  அன்றி  உன்னை  தொடமாட்டேன் 
என்னுள்  ஒரு  திரி  பற்றினால்  போதும்  உன்னை  விடமாட்டேன் 
உள்ளங்கையில்  உன்னை  எடுப்பேன்  மண்ணில்  விடமாட்டேன் 
விண்ணில்  நிலா  விழுந்திடும்  போதும்  உன்னை  விடமாட்டேன் 
தொட்டாலே  உறைந்து  போகிறேன் 
முத்தத்தில்  கரைந்து  போகிறேன் 
அன்பே  நான்  அம்மானை  பாட  பொன்னூஞ்சல்  ஆட 
உன்  கூந்தல்  தருவாயா 
உன்  உதடோடு  நானே  நிதம்  ஆடிட  மறுப்பாயா 

என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 
நிலாவே  நீங்கிடாதே 
அழகு  மகள்  மேனியை  கண்டேன் 
வாச  தாமரை  அங்கம்  அங்கம் 
தாமரையே  தலையணை  ஆனால் 
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம் 
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம் 
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும் 
என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள் 
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள் 
முத்தத்தின்  கலை  கற்றுகொள் 

Poomagal Oorvalam - Chinna Vennilave

பூமகள் ஊர்வலம் - அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே

தாய்தானே..... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே..

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும் தந்தை நாமமே சொல்க

இங்கு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை

ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை...

தாய்தானே...... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே...... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே...

தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதைக் கண்டுகொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்

நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்

தாய்தானே...... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே...... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே 

தாய்தானே..... அன்புக்கு ஆதாரம் 
தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்

Poomagal Oorvalam - Antha Vaanukku

Followers