Pages

Search This Blog

Tuesday, January 28, 2014

நான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா வெண் மேகமே

சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை .............
ஆலாபனை ஆராதனை
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம் ஓஓஓஓ
காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓஓஓஓஓ
என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

Naan Paadum Paadal - Seer Kondu Vaa

மறுபடியும் - நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே
நாள் ஒரு தோளினில்
மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது ஞாயமா

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாள் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

Marupadiyum - Nalladhor Veenai 

மோதி விளையாடு - ஒற்றை வார்த்தையில்

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன
கற்றை  பார்வையில்  கற்றை  பார்வையில்
கண்ணால்  ஜாடைகள்  செய்தால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

கவிதையிலே  பொய்களுக்கு  கெளரவம்  அதிகம்  தான்
காதலிலே  உயிர்களுக்கு  கெளரவம்  குறைவு  தான்
நேருக்கு  நேர்  காதல்  சொன்னால்  நெஞ்சுக்கு  நிறைவு  தான்
காதலின்  வீதியில்  மௌனமே  இரைச்சல்  தான்

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

Modhi Vilayadu - Ottrai Vaarthayil

மோதி விளையாடு - பாதி காதல் பாதி முத்தம் போதாது

பல்லவி :

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது   போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஓ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாடா
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி   மூட்டி  உயிர்  உருக  செய்த   மன்மதா
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  நான்  ஆணின்  தேகம்  ஆவதாக  வெட்க  கனவு  வெள்ளை  கோடு  தாண்டும்
என்  வயது  வலிக்குதடா

பறக்கும்  முத்தம்  கொடுத்து  என்னை  பறக்க  சொல்லும்  மன்மத
விரும்பி  உன்னை  அழைக்க  பசி  விலகி  செல்வதா

சரணம்  1

காதல்  என்னை  காதல்  செய்ய  பாதுகாப்பு  வளையம்  தளர்த்தினேன்
பூனை  போல  உள்ளே  வந்த  பானை  இருக்கும்  திசையை  காட்டினேன்
பயந்து  கொண்டே  இதழ்  குளித்தாய்
பாதியிலே  விட்டு  பாய்  மேல்  சென்றாய்  (?)

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  தோன்றும்  ஒ  ஒ  ஹோ

சரணம்  2

ரோஜா  பூவின்  வாசம்  எல்லாம்  எந்த  உதடில்  அதிகம்  உள்ளதோ  ஹோ
பெண்மைக்கான  இன்பம்  எல்லாம்  எந்தன்  உடலில்  எங்கு  உள்ளதோ
வாத்சாயனம்  பதிதவனே
வாரி  கொடுத்தால்  சொர்க்கம்  காண்பேன்  நானே

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி  மூட்டி  உயிர்  உருக  செய்த  மன்மத
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

Modhi Vilayadu - Paathi Kadhal

முள்ளும் மலரும் - ராமன் ஆண்டாலும்

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்ட என் மனசுக்கு ராஜ
வாங்குங்கட வெள்ளியில் கூஜா
நீ கேட்ட கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகொட

யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கனும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியை கூப்டு அவளோட செடியை கூப்டு
எ மதுரை ராஜ்ஜியம் என்னுது உனக்கொரு பாதியை கொடுக்கிறேண்ட

பொன்னா பூ பூத்து வைரம் காயாக கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு ப்சோகம் விளையும் லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன் மனசிருக்கு போழைசி பாக்குறேன்
எ போன போகுது வேலை உனக்கொரு வேலைய கொடுக்கிறேண்ட

ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்கற சாமியை பார்த்து கேளுங்கட

Mullum Malarum - Raaman Aandaalum

இருவர் - வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)

Iruvar - Venilla Venilla

இருவர் - கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே...பயமில்லையே...
மனதினில் கரையில்லையே...குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா

Iruvar - Kannai Kattikolathey

Followers