Pages

Search This Blog

Thursday, December 26, 2013

என்றென்றும் புன்னகை - என்னத்த சொல்ல

ரொம்ப நேரம் இதே போயிட்டு இருக்குடா
மச்சான் எடுத்துவிடு

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

ஐயோ பழைய கதைடா

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

மயில் போல வருவா
புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மண்ணாவ மாமா
அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா மாமா
அவ உன்னை மிதிக்க
செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சுக்க ஆமா
ஏலே பெண்டு நிமித்தி
உன்னை கண்டபடிதான்
அவ ஆட்டிபடப்பா மாமா
அவ கழுத்துல தான்
மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம் ஆமா

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப் லாங்க் தொல்ல

ஹேப்பி மேனா பார்த்த
ஆறுமுகம் இப்போ
பி.பி வந்து படுத்துபிட்டான்
காபி டீயை கூட
கையால் தொடா நண்பன்
குவாட்டரல குளிசிடுறான்
ஹே.. பொண்ணும் போலி
அவ லவ்வும் போலி
ஒரு நூலு தாலி
அதில் நீயும் காலி
டார்ச்சருடா ஏலே டார்ச்சருடா
எந்த மேரேஜ்ஜுமே இருட்டு
பேச்சுலரா நீயும் கூத்தடிச்சா
நீ சொல்வதெல்லாம் ரைட்டு

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப் லாங்க் தொல்ல

யப்பா நாக்கு தள்ளுதுடா

ஒத்த தலைகாணி
போதுமடா சாமி
கட்டிக்கிட்டே தூங்கிக்கொள்ளலாம்
வாய்க்கு ருசியாக
வக்கனையாக திண்ண
குக் ஒன்னு வச்சுக்கொள்ளலாம்
சின்ன தாகம் தீர
பெரும் சோகம் வேணா
ஒரு ரோட்டை தாண்ட
ஏரேபிளேனு வேணா
மூச்சு முட்ட நீயும் குடிச்சுபிட்டு
போய் மூலையில தூங்கு
பேச்சு துணை வேணுமுனா
நல்ல ரேடியாவ வாங்கு
கு… கு…

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

மயில் போல வருவா
புது போதை தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மண்ணாவ மாமா
அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா மாமா
அவ உன்னை மிதிக்க
செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சுக்க ஆமா.
ஏலே பெண்டு நிமித்தி
உன்னை கண்டபடிதான்
அவ ஆட்டிபடப்பா மாமா
அவ கழுத்துல தான்
மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம் ஆமா

Endrendrum Punnagai - Ennatha Solla

மே மாதம் - மார்கழிப் பூவே மார்கழிப்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை (மார்கழி)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)

May Madham - Maargali Poovae

ரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே மூச்சு

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

நீ ஒரு பூக்கோடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பாங்லாக்கரில் சேமிக்கிரேன்
உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
றோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்
நீ அகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்
கடல் கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலய்கொல்லப்பார்த்தேன்
உன் னெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை விட்டுப் பார்த்தேன்
பார்த்தேன் பார்த்தேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

Roja Kootam - Mottugale Mottugale

ரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யாரோ

என்னை நீ பார்க்கவில்லை
என்னுயிர் நோந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என்னுயிர் போனதடி

எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி
---
மின்னலை கண்டு கண்கள் மூடி
கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள
ஹாய்யோ அய்யோ வசதியில்லை

என்னை நோக்கி சிந்திய மழைதுளி
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சு
இதுவரை ஏதும் தகவல் இல்லை

அழகே உன்னை காணாமல் அன்னம்
தண்ணீர் தொடமாடேன்
ஆகாயத்தின் மறுபக்கம்
சென்றால் கூட விட மாட்டேன்

உனை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
---
எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
---
பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்
லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் அய்யோ பைத்தியம் என்று
பார்வையினாலே கொல்வாயா

உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால்
ஒகே என்று சொல்வாயா

ஆமாம் என்று சொல்லிவிட்டால்
ஆண்டுகள் நூறு உயிர் தரிப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால்
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்

நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்
மீண்டும் காதலிப்பேன்
---
எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யாரோ

Roja Kootam - Apple Penne Neeyaaro 

மே மாதம் - மின்னலே நீ வந்தேனடி

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கண் விழித்து  பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
பால் மழைக்கு  காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

May Madham - Minnalae Nee

மே மாதம் - மெட்ராஸை சுத்தி பார்க்க

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்
(மெட்ராஸை..)

ஹே.. மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்
(இதுதானே..)

அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
பாரின் சரக்கு பர்மபஜார்
நம்ம உள்ளூர் சரக்க் பாம்பஜாரு

ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு
பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு

மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்
மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால்
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு
(மெட்ராஸை..)

பொண்ணு ஏ பொண்ணு
நாத்தான் துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு

காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்த சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மகராசி

வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெண்ட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்
ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
செண்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்
சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்கே இல்ல ஜோலி பக்கேட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி
(மெட்ராஸை..)

May Madham - Madrasai Suthi

மே மாதம் - மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி )
 
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)
 
(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)
காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)
(வெண்பா)

May Madham - Marghazhi Poove

Followers