Pages

Search This Blog

Thursday, December 26, 2013

ரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யாரோ

என்னை நீ பார்க்கவில்லை
என்னுயிர் நோந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என்னுயிர் போனதடி

எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி
---
மின்னலை கண்டு கண்கள் மூடி
கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள
ஹாய்யோ அய்யோ வசதியில்லை

என்னை நோக்கி சிந்திய மழைதுளி
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சு
இதுவரை ஏதும் தகவல் இல்லை

அழகே உன்னை காணாமல் அன்னம்
தண்ணீர் தொடமாடேன்
ஆகாயத்தின் மறுபக்கம்
சென்றால் கூட விட மாட்டேன்

உனை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
---
எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
---
பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்
லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் அய்யோ பைத்தியம் என்று
பார்வையினாலே கொல்வாயா

உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால்
ஒகே என்று சொல்வாயா

ஆமாம் என்று சொல்லிவிட்டால்
ஆண்டுகள் நூறு உயிர் தரிப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால்
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்

நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்
மீண்டும் காதலிப்பேன்
---
எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யாரோ

Roja Kootam - Apple Penne Neeyaaro 

Followers