Pages

Search This Blog

Tuesday, December 17, 2013

கண்ணுக்குள் நிலவு - எந்தன் குயிலெங்கே

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி...ஒ ஒ ஒ ஓ...
கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி...ஒ ஒ ஒ ஓ...
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய் (2)
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே...ஒ ஒ ஒ ஓ...
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்...ஒ ஒ ஒ ஓ...
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும் (2)
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

Kannukkul Nilavu - Enthen Kuilenge

கண்ணுக்குள் நிலவு - நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

Kannukkul Nilavu - Nilavu Paatu

கண்ணுக்குள் நிலவு - அடிடா மேளத்த

ஏய்...என்னடா நட...தாளம் தப்புது...
ஏய் தாளத்துல நடறான்னா...

யம்மா யம்மா...யம்ம தம்ம தம்ம தம்ம...தம்மா (2)

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத கிச்சான் கிச்சான்
மாஞ்சாவே தடவாத கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

கட்டு கட்டா பணத்த அட சேத்து வெச்சவன் கொட்ட கொட்ட முழிப்பான்
கன்னக் கோலு மறைக்கும் அட மனுஷந்தாண்டா தூக்கம் கெட்டுத் தவிப்பான்
திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன் தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்
நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான் ஆனாலும் கண் முழிக்க வெச்சான் வெச்சான்
ஆசையில் பம்பரமா ஆட்டி வெச்சான் எல்லாமே யந்திரமா மாத்தி வெச்சான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சங்கீதத்தின் சங்கதி சரிகமப தம்பிக்குச் சொல்லிக் கொடு
தம்பி சுருதி பிடிச்சா தம்மாரே தம்மு கொடு
லால்லா லால்லலல லால்லா லால்லலல லால்லா லால்லலல லால்லாலல்லா
கொறட்ட கொறட்ட ஜதி போடுது உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது
உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல
சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத கிச்சான் கிச்சான்
மாஞ்சாவே தடவாத கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

Kannukkul Nilavu - Adida Melathai

ஜன்னல் ஒரம் - உன்னப் பார்க்காம பார்க்காம

உன்னப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

உன்னத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்

எனக்குள்ளே நூறு பேச்சு சிரித்தேனோ கூடிப் போச்சு
பொழுதெல்லாம் வீணாப் போச்சு புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால

உன்னப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்பவே ஆசை வச்சேன்
என்னைக்கும் நீயே தான்னு ஏதேதோ பூசை வச்சேன்
சந்திக்க சேதி வச்சேன் சம்மதம் கேட்டு வச்சேன்
கட்டிக்கத் தாலி செஞ்சி எப்பயோ வாங்கி வச்சேன்
நூறு வருஷமும் இல்ல
பல கோடி வருஷமும் இல்ல
ஒரு நாளில் ஒரு நொடி போதும் என என் கூட

உன்னப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
தூக்கம் இல்ல தூக்கம்
தூக்கம் ஐயோ ஏக்கம்

முல்லப்பூ வாசம் என்ன
மல்லிப்பூ வாசம் என்ன
கண்ணே உன் வாசம் பட்டால் கல்லுமே பூப்பதென்ன
அத்திப்பூ வாசம் என்ன
அல்லிப் பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாமல் அரளிப்பூ கேட்பதென்ன
போதும் நிறுத்தடி யம்மா புரியாம குழம்புறேன் சும்மா
உசுரோட அடிக்கிற வாசம் அது காதல் தான்

உன்ன பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

உன்னத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
கூச்சம் இல்ல பேச்சு
கூச்சம் ஐயோ கூச்சம்

எனக்குள்ளே நூறு பேச்சு சிரித்தேனோ கூடி போச்சு
பொழுதெல்லாம் வீணா போச்சி புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால

Jannal Oram - Unnai Paarkama

பாண்டிய நாடு - ஃபை ஃபை கலாச்சிஃபை

ஃபை ஃபை  ஃபை கலாச்சிஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை
வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டிஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு (2)

செல்லு கட மாமா
என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ டெல்லிஃபை
ஆசையில்லா ஆணா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க ஃபுள்ளுனாலும் என் திங்கிஃபை
டச் டச் ஸ்கிரீனாட்டம் முன்ன வந்து நின்ன
என்ன வந்து நீ நோண்டிஃபை ஃபை
பச்ச பச்சயாக என் இச்சையெல்லாம் சொன்னே
அச்சமெல்லாம் நீ போக்குஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை

பஞ்சாயத்து கூட்டிஃபை
எட்டுபட்டி கேட்டுஃபை
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்துஃபை
நாட்டத்த நான் சொல்லிஃபை
குத்தமென்ன தள்ளிஃபை
நாட்டாம  உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்திஃபை
திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்ட
என்ன என்ன நீ தூக்கிஃபை ஃபை
நெல்லிவட்டு கண்ணால எல்லிமுட்டு மேலே
தட்டி தட்டி நீ தாக்கிஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை  ஃபை கலாச்சிஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை
வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டிஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு
வாய் வச்சு வாய் வச்சு வாய் வச்சு

Pandiya Naadu - Fy Fy Kalachify

பாண்டிய நாடு - ஏலே ஏலே மருது

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது

தரும தேவதை கருணைப் பார்கையில்
சபலம் பறக்குது சரீரம் மறக்குது
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே

ஏலே ஏலே மருது ஹே ஹே
இவ எந்த ஊரு கருது ஹே ஹே ஹே
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்னக் கடத்தி
ஆளக் கொல்லும் அந்த கொள்ளிக் கண்ணில்
உசுரோட என்னக் கொழுத்தி

Pandiya Naadu - Yele Marudhu

பாண்டிய நாடு - ஒத்தகட ஒத்தகட மச்சான்

ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

ஜெயிச்சா ஜோடி வரும்
தோத்தா தாடி வரும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
ஜெயிச்சா மாலை மாத்து
தோத்தா ஆள மாத்து
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு

ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

கண்ண காட்டி வலை விரிக்கும்
கண்ண கட்டி கழுத்தறுக்கும்
மொத்த உறவு கூட்டி வந்து
மொத்த உறவை கொண்டுபுடும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
செல் போனுக்கு செலவழித்து
செல்வம் எல்லாம் கறைச்சுபுடும்
அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து
ஆயுள் முழுக்க அழுக விடும்
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு

ஒத்தகட ஓததகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

ஹே ஒத்தகட ஒத்தகட மச்சான்
நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன்
ஓடிப் போன ஓடிப் போன பொண்ண
இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன்

ஜெயிச்சா இன்பம் வரும்
தோத்தா ஞானம் வரும்
இதான் மச்சான் லவ்வு
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு
எலியும் புலி அடிக்கும்
புழுவும் படமெடுக்கும்
இதான் மச்சான் லவ்வு
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு
நாறும் பூவாகும் டா
மச்சி மோரும் பீர் ஆகும் டா
வெறும் நாறும் பூவாகும் டா
மச்சி மோரும் பீர் ஆகும் டா

Pandiya Naadu - Othakada Machan

Followers