Pages

Search This Blog

Tuesday, December 17, 2013

பாண்டிய நாடு - ஏலே ஏலே மருது

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது

தரும தேவதை கருணைப் பார்கையில்
சபலம் பறக்குது சரீரம் மறக்குது
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே

ஏலே ஏலே மருது ஹே ஹே
இவ எந்த ஊரு கருது ஹே ஹே ஹே
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்னக் கடத்தி
ஆளக் கொல்லும் அந்த கொள்ளிக் கண்ணில்
உசுரோட என்னக் கொழுத்தி

Pandiya Naadu - Yele Marudhu

Followers