Pages

Search This Blog

Tuesday, November 19, 2013

வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெயில் மாலையிலே

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
-- நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய் ..

உ வண்ண அசுரன் தா ..சு தா ..சுத்த
ஒ ......
வோட் டைப் ஆப் அசுரன் .. அசுரன் .. அசுரன் ..

மஞ்சள் வெயில் மாலையிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் கட்டுதே

தயகங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே ....


வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

உலகத்தின் கடை சியே
இன்று தான் .....என்பதுபோல்
பேசி பேசி தீர்ந்தபின்னும்
எதோ ஒன்று குறையுதே ...

நூடி நூடி சின்னசிறு
மரகத மூச்சம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே ...


வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மலாயிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் கட்டுதே

தயகங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே
..ஒ ஒ ...

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சில
நடுக்கிறாள் -- நடுக்கிறாள்
ஏ ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நலைகிறாள் நலைகிறாள்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹேய் ..யாரோ யாரோ யாரோ
ஒரு காதும் காதும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாலும் ஒட்டி செல்ல ...

வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ களம் தள்ளி
நெஞ்ஜோரும் பனித்துளி

நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிக்கவைதாள் பேச வைத்தாள்
நெஞ்ஜோரும் பனித்துளி
--ஒ ஒ .....

Vettaiyaadu Vilaiyaadu - Manjal Veyil

வேட்டையாடு விளையாடு - உயிரிலே எனது உயிரிலே

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......
(உயிரிலே..........)

Vettaiyaadu Vilaiyaadu - Uyirile Enadhu Uyirile

அண்ணா நகர் முதல் தெரு - மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

Anna Nagar Mudhal Theru - Medhuva Meduhva Oru Kaathal

ரிக்ஷா மாமா - வைகை நதியோரம் பொன்மாலை

எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
(ஓர் சோலை..)
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்
(வைகை நதியோரம்..)

யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
(ஓர் நெஞ்சின்..)
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
(வைகை நதியோரம்..)

Rickshaw Mama - Vaigai Nadhi Oram

Wednesday, November 13, 2013

முத்து - கொக்கு சைவக் கொக்கு

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் (2)

மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் (2)

பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சொக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

(கொக்கு சைவக்)

பந்தாடும் வயசுப்பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே சட்டங்கள் இருக்குதைய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you I love you 12 times சொல்லு

நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற கட்டிலில் சேர்ந்துவிடு
நான் சொன்ன கணக்கு நாள்தொறும் நடந்தா
பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா

(கொக்கு சைவக்)

வயசான சுந்தரியே மன்மதன் மந்திரியே
தாம்பத்யப் பாடத்திலே H.nகு முடிச்சவலே
அன்னாளில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு
இன்னாளில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லையே

ஒக்கார்ந்து காதலிக்க யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு

(கொக்கு சைவக்)

Muthu - Kokku Saiva

முத்து - தில்லானா தில்லானா தித்திக்கின்ற

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

(தில்லானா)

Muthu - Thilana Thilana

முத்து - விடுகதையா இந்த வாழ்க்கை

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் (2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு (2)
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது (2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே (2)

Muthu - Vidu Kathaiya

Followers