Pages

Search This Blog

Wednesday, November 13, 2013

முத்து - விடுகதையா இந்த வாழ்க்கை

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் (2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு (2)
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது (2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே (2)

Muthu - Vidu Kathaiya

Followers