Pages

Search This Blog

Wednesday, November 6, 2013

படையப்பா - ஒ ஒஹோ கிக்கு ஏறுதே

ஒ ஒஹோ கிக்கு ஏறுதே
ஒ ஒஹோ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள
அட தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
இந்த வாழ்கை வாழ தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல

தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட எது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவரும் தவிர
இங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்கு மட்டும்
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்கு மட்டும்
இதுதான் ஞான சித்தர் பாட்டு
இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் மதச்சண்டை ஜாதிச்சண்டை வம்பெதுக்கு

தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
எண்ணி பார்க்கும் வேளையில்
உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று விடு

Padayappa - Kikku Yerudhey

படையப்பா - என் பேரு படையப்பா

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு

என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா

பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கி தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இட வேண்டாம்
தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது தமிழல்லவா
என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முரியால்லவா
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா

உன் கையை நம்பி உயர்ந்திட பாரு
உனக்கென எழுது ஒரு வரலாறு
உனக்குள்ளே சக்தி இருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுப வேளை நாளை மாலை சூடிடு
அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம்
கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொறு மனமே
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்பா  நான் மீசவெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு ஹோய்
படையப்பா

Padayappa - En Peru Padayappa

மின்சார கண்ணா - ஊதா ஊதா ஊதா பூ

ஊதா  ஊதா  ஊதா  பூ
ஊதும்  வண்டு  ஊதா  பூ
ஊதா  ஊதா  ஊதா  பூ
ஓத  காற்றில்  மோதா  பூ

நான்  பார்த்த  ஊதா  பூவே
நலம்  தான  ஊதா  பூவே
தேன்  வார்த்த  ஊதா  பூவே
சுகம்  தானா  ஊதா  பூவே
ஊதா  ஊதா  ஊதா  பூ
இன்றும்  என்றும்  உதிரா  பூ

ஊதா  ஊதா  ஊதா  பூ
ஊதும்  வண்டு  ஊதா  பூ
ஊதா  ஊதா  ஊதா  பூ
ஓத  காற்றில்  மோதா  பூ

நீ  பார்த்தல்  ஊதா  பூவே
நலமாகும்  ஊதா பூவே
தோள்  சேர்த்தால்  ஊதா பூவே
சுகம் தானா  ஊதா பூவே
ஊதா  ஊதா  ஊதா  பூ
உன்னை  நீங்கி  வாழா  பூ

ஊதா  ஊதா  ஊதா  பூ
ஊதும்  வண்டு  ஊதா  பூ

ஓர்  உயில்  தீட்டி  வைத்தேன்
நான்  உனக்காக  என்று
என்னுயிர்  கூட  இல்லை  இனி  எனக்காக  என்று
ஓர்  நெடுஞ்சாலை  தன்னை
நான்  கடந்தேனே  அன்று
என்னை  நிலம்  கேட்டதம்மா
உன்  நிழல்  எங்கு  என்று
உன்னில்  நான்  ஒரு  பாதியென  தெரியாதோ
அன்பே  நீ  அதை  சொல்லுவதேன்  புரியாதோ
ஊதா  ஊதா  ஊதா  பூ
உன்  பேர்  தவிர  ஓதா  பூ


ஊதா  ஊதா  ஊதா  பூ
ஊதும்  வண்டு  ஊதா  பூ

உன்  மழை  கூந்தல்  மீது
என்  மன  பூவை  வைத்தேன்
ஓர்  உயிர்  நூலை  கொண்டு
இரு  உடல்  சேர  தைதேன்
உன்  விழி  பார்வை  அன்று
எனை  விலை பேச  கண்டேன்
நீ  எனை  வாங்கும்  முன்பு
நான்  உன்னை  வாங்கி  கொண்டேன்
எந்தன்  காதலி  சொல்லுவதே  இனி  ஆணை
என்றும்  தாவணி  வென்றிடுமோ  ஒரு  ஆணை
ஊதா  ஊதா  ஊதா  பூ
என்றும்  நீதான்  வாடா  பூ

ஊதா  ஊதா  ஊதா  பூ
ஊதும்  வண்டு  ஊதா  பூ
ஊதா  ஊதா  ஊதா  பூ
ஊதா  காற்றில்  மோதா  பூ

நான்  பார்த்த  ஊதா  பூவே
நலம்  தானா  ஊதா  பூவே
தேன்  வார்த்த  ஊதா  பூவே
சுகம்  தான  ஊதா  பூவே
ஊதா  ஊதா  ஊதா  பூ
இன்றும்  என்றும்  உதிரா  பூ

Minsara Kanna - Oodha Oodha

மின்சார கனவு - தங்கத் தாமரை மகளே

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை )

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஓலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?
(தங்கத் தாமரை )

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
(தங்கத் தாமரை )

Minsara Kanavu - Thanga Thamarai

மின்சார கனவு - பூப்பூக்கும் ஓசை அதைக்

பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி

(பூப்பூக்கும் ஓசை)

கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2)
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைக்கள் ஓசை சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

Minsara Kanavu - Poo Pookum Oosai

மௌன ராகம் - நிலாவே வா

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே

கவேரிய கானல் நீரா பெண்மை எது உண்மை
முள் வெளிய முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை
தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை

பூஞ்சோலையில் வாடை காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென்று தூறல் போடும் எதோ மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் காணாத மேகம் எது கண்ணே

Mouna Ragam - Nilaavae Vaa

மௌன ராகம் - மன்றம் வந்த தென்றலுக்கு

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே
அது ஏன் ..என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழஅகு வட்ட நிலவோ
கண்ணே ..என் கண்ணே

பூபாளமே ..கூடாதெனும் ..வானம் உண்டோ சொல் ..

(மன்றம் )

தாமரை மேலே நிர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன ?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
புவே உன் வாழ்க்கை தான் என்ன ?

(மன்றம் )

மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன ..வா .

(மன்றம் )

Mouna Ragam - Mandram Vandha

Followers