Pages

Search This Blog

Friday, October 25, 2013

பூமகள் ஊர்வலம் - கண்ணைப் பறிக்குற

கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்கிதடா

இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்

கண்ணைப் பறிக்குற ....

இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்
எந்நாளும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்

இளமை வயதில் வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்
எப்போதும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்

இவள் போலொரு மனைவியும் வாய்த்தால் மூப்பு நேராது
இவள் கூந்தல் மாத்துரி வைத்தால் நோயும் வாராது
உங்களுக்குன்னு பூத்த மாங்கல்யம் நிறம் மாறி போகாது
நான் காணும் மாங்கல்யம் நிறம் மாறிப் போகாது

கண்ணைப் பறிக்குற ....

கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும்
கண்ணில் வைத்து காவல் காக்கவும்
எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்

வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும்
வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும்
எப்போதும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்

என் போலொரு ஆம்பள பார்த்தா பொண்ணு விட மாட்டா
முந்தானையில் முத்தம் தந்தா மூச்சு விட மாட்டா
தாலி கட்டி கேட்டா கூட தானா தர மாட்டா
அட தள்ளாடும் தாத்தாவுக்கும் என்னோட விளையாட்டா

கண்ணைப் பறிக்குற ....

Poomagal Oorvalam - Kannai Parikkira

பூமகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

Poomagal Oorvalam - Malare Oru Varthai

லவ் டுடே - என்ன அழகு எத்தனை

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுக்சம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

(என்ன அழகு ...)

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே

(என்ன அழகு ....)

நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாசு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

(என்ன அழகு ...)

Love Today - Enna Azhagu

லவ் டுடே - ஏன் பெண்ணென்று

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு...!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!
(ஏன்)

Love Today - Yen Pennendru

மறுபடியும் - நலம் வாழ எந்நாளும்

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!..

Marupadiyum - Nalam Vazha

பூமகள் ஊர்வலம் - அந்த வானுக்கு

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

சுடு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.

Poomagal Oorvalam - Antha Vaanukku

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - எங்கே எனது கவிதை

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...

Kandukondain Kandukondain - Yengae Enathu Kavithai

Followers