Pages

Search This Blog

Showing posts with label Psycho. Show all posts
Showing posts with label Psycho. Show all posts

Tuesday, June 9, 2020

சைக்கோ - தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

சோகம் தாங்கி
பாரம் இறக்க யாரும் இல்லையே
தாகம் தீர்க்க
சுணையாய் இங்கு கருணை இல்லையே

கோபம் வாழ்வில் நிழலாய்
ஓடி ஆடி அலையா
பாசம் நெஞ்சில் கனலாய்
ஓங்கி ஏங்கி எரிய

காற்றே என்
காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

காயம் செய்த மனிதன்
இன்று இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை
நினைத்து ஒளியில் நனைகிறேன்

காலம் மீண்டும் மாற
மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற
பாரம் நெஞ்சில் இல்லை

தாயே என்
தாயே உன்
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே

தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே (2)



Psycho - Thai Madiyil

சைக்கோ - நீங்க முடியுமா நினைவு தூங்குமா

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

தேவன் ஈன்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்

நீ கண்கள் தேடும் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசும் மொழியோ
என் மனதை நெய்த இழையோ

வீசும் தென்றல் என்னை விட்டு
விலகி போகுமோ
போன தென்றால் என்று எந்தன்
சுவாசம் ஆகுமோ
இரு விழியிலே ஒரு கனவென
உன்னை தொடருவேன்…..

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

மூன்று காலில் காதல் தேடி
நடந்து போகிறேன்
இரண்டு இரவு இருந்த போதும்
நிலவை கேட்க்கிறேன்

நீ கடந்து போன திசையோ
நான் கேட்க மறந்த இசையோ
நீ தெய்வம் தேடும் சிலையோ
உன்னை மீட்க என்ன விலையோ

இன்று இல்லை நீ எனக்கு
உடைந்து போகிறேன்
மீண்டு வாழ நாளை உண்டு
மீட்க வருகிறேன்

ஒரு தனிமையும்
ஒரு தனிமையும்
இனி இனையுமே

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா




Psycho - Neenga Mudiyuma

சைக்கோ - உன்ன நெனச்சு நெனச்சு

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா(2)
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா (2)

யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

வாசம் ஓசை
இவைதானே எந்தன் உறவே….
உலகில் நீண்ட
இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்

பார்வை போனாலும்
பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல
எதுவும் இல்லை

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

ஏழு வண்ணம்
அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து
பேசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே

கையில் நான் ஏந்தும்
காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள்
மூழ்கிப்போவேன்

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா



Psycho - Unna Nenachu Nenachu Urugi

Followers