Pages

Search This Blog

Tuesday, December 17, 2019

நம்ம வீட்டுப் பிள்ளை - மயிலாஞ்சி மயிலாஞ்சி

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே

தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே


விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ

கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ

அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்

வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்

சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி



Namma Veettu Pillai - Mailaanji Mailaanji

Followers