Pages

Search This Blog

Thursday, January 3, 2019

பெங்களூர் நாட்கள் - என் விழியின் கனவு உன் சொந்தம்

என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை!
நீ காணாதே - அதில்
பிழை தேடாதே!

என் சிறிய உலகில்
நீ யாரும் இல்லை!
ஏன் கேட்காதே - அதில்
அடி வைக்காதே!

என்னுள் நானாய் பாடும்
பாடல் ஒட்டுக் கேட்பதேன்?
நெஞ்சில் முணுமுணுப்பதேன்?
என் வாழ்வை வாழ்வதேன்?

எந்தன் பசி எந்தன் தாகம் கூட
உனைக் கேட்டு வரவேண்டுமா?
நீ எந்தன் சுவாசமா?

மீண்டும் மீண்டும் என் மேல்
பூ வீசிப் போகிறாய்...
ஏதோ நீ சொல்லப் பார்க்கிறாயோ?

எந்தன் கண்ணில்
உந்தன் கண்ணீர்
நான் ஏந்த முயல்கின்றேன்!

உன் சோகம்
என் நெஞ்சில்
ஏந்திப் போகிறேன் அது ஏனடா?
நான் ஏன் நீயாகிறேன்?

ஆயினும் நான் நானே!
என்னில் உனைக் காணத்தானே
நீயானேனே!

நான் ஏன்?

அருகே நீ தூரமாய்...
தினமும் கொன்றாயடி!
யார் யாரோ நாம்
என்றாயடி! 

நெஞ்சைக் கொட்டி
நான் தீர்த்தேன்
கேளாமல்... நீ சென்றாய்!

என் மேல் காதல்
தோன்றாதா?
பேசாமல் நீ வதைக்கிறாய்!

என் காதல்... நீ காண...
மாட்டாயா? மா...ட்டா...யா?



Bangalore Naatkal - En Vizhiyin Kanavu

Followers