Pages

Search This Blog

Thursday, January 31, 2019

இடம் பொருள் ஏவல் - கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே

கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே
துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே

உன் கால்களின் கீழே நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும்

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமெ
துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே

உன் கால்களின் கீழே நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும்

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

துளி எல்லாம் கடல் ஆவது இல்லை
துளி இன்றி கடல் எதும் இல்லை

வேர்வை எல்லாம் வெற்றி பெற வில்லை
வேர்வை இன்றி வெற்றி எதும் இல்லை

நிலா மேலே கல்லை வீசிப்பார்
விண்மீன் ரெண்டு வந்து வீளலாம்

உன் கடவுள் கண் திறக்க
உழைப்பே ஒற்றை வழி
தன்னை வென்றோன் மண்ணை வென்றெடுப்பான்

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

ஹிந்தி தமிழ் எது சொன்ன போதும்
எல்லா காதும் கேட்பதும் இல்லை

காசு மட்டும் முணு முணுத்தாலோ
காது கேழா மனிதர்கள் இல்லை

கட்சி இல்லை நம்மை ஆள்வது
காசு பணம் தானே ஆடுது

உன் காதல் வெற்றி கொள்ள
காந்தி நோட்டு வேணும்
காசு போட்டால் லோகம் சுத்துமடா

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே
துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே



Idam Porul Yeval - Kondaatamae Nam

இடம் பொருள் ஏவல் - எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

கலூச்சான் குருவி முள்லுக்குல் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்

வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

வெளுத்தது பாலு கருத்தது காக்கா
இது தான் இது தான் ஏழ மக்கா

ஒரு சொத்து கண்ணீர் உள்ளன் கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்கா

நேத்து வச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே

அந்த கூழ பாகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே

பாசக் கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே

இது போன வாழ்க்க இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்ப

ஒததையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க
தோதா உயிர் வேணுமப்பா

ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம் தான்

சித்த பந்தம் கூடி வந்தா
சேந்த தெல்லாம் சொந்தம் தான்

சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காதுக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்

வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது



Idam Porul Yeval - Endha Vazhi

இடம் பொருள் ஏவல் - ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

மலங் காடு மயிலே மாசம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற

தஞ்சம் வந்து கெடக்கேன் தப்பி வந்து பொழாக்கேன்
துன்பத்துக்கு வாக்க பட பாக்குற

பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணா தீங்க
மண்ணுக்குள் நூல் கோல் போல என்ன கண்ணுக்குள் மூடா தீங்க

ஓ மாலயில் ஒதுங்க தானே நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்க தானே நீ பகலில் வெயிலா வந்தே

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

செஞ்சு வச கல்லானேன் உன்னால சேல கட்டும் பொன்னானேன்
என் சேல அழுக்காக வா உள் கூடு வேர்வை பூக்க வா நீ வா

ஆம்பளக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளான்னு நம்பனுமா
சொல்லாம வேலை பார்த்து போ

கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ அட உசிரே உள் வாங்கும் காத்து தான்
என் கூந்தல் போர்வை ஆகுமே

ஆடு தோலு என் போர்வை ஆகலாம் வெள்ளாடு போர்வை ஆகுமா
செல்ல கருப்பா எந்த கொழுப்பா உண்ம சொல்லு

உன்னை பூசி எப்போதும் காம்போட ஒட்டி கிட்ட
போகாது என் உசிர உருஞ்சாதடி

என் பொழப்பில் ஈரம் இல்ல பொதி சீக்கு பட்ட எல் போல சும்மா நீ
நோக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா என் தோளில் தேமல் பாத்து போய்யா

ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட பாக்குற
தன் தலைய மண்னோட மூடுர தீ கோழி போல ஏய்க்கிற
என்ன மடக்க மார்பில் ஈடுக்க பாக்குறியா

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து



Idam Porul Yeval - Eerakkaathae

இடம் பொருள் ஏவல் - அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா

ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு

பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவா

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா

அவ என்ன தாயா நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே

கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட
எச்சத்தில் ஆல மரமே வருமே

தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம் தான்

பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம் தான்

பாச முழுகயில் பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே

இடம் பொருள் ஏவல் அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே

யாரும் அற்ற காதில் பேசு துணை யாரு
சிட்டு குருவி போதுமே

ஒத்த மரமாகி போன இது பொண்ணா பொம்பள
மகிழ்ந்து தான் பூத்து போனா

மகன் வந்த தெம்புல நஞ்சு போன
வாழ்க்கை சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா




Idam Porul Yeval - Atthuvaana Kaatukku

இதயக்கனி - தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்

அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி
இரவை ரசிப்போம் கனவில் உலவி

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
மெத்தையிடும் முன்னால் என் மேலாடை தாலாட்ட
தேனோடு தேன் சேர
இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

Heyy wots ur name baby
Mala
OHH how sweet name...
really ya lovely name
come lets dance baby....

எங்கேயோ பார்த்த ஞாபகம்
ஞாபகம் ஞாபகம் ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் மலர் காவியம்
எழில் ராணியின் இதழ் நாடகம் இதழ் நாடகம்
தமிழ் காதலின் புகழ் கோபுரம் புகழ் கோபுரம்
அகப் பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்
அசல் இவ்விடம் நகல் அவ்விடம்
அழகென்பதே விஷமாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் ஆடை கட்டி
வந்து நிற்கும் மேடு
பள்ளமானதொரு பாவை விழி
ஜாடை முத்தம் போடுகின்ற ஆலவட்டம்
மீறுகின்ற போதை
வீணை மட்டும் பேசுகின்ற வாணி
பெற்ற பேரை வெல்க
வார்த்தை இவள் ஆணை
வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட
காதல் தேவன் கோட்டை காதல் தேவன் கோட்டை

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே
முகம் தேடினேன் முகம் கண்டதும்
புது காதலில் நடமாடினேன்
சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்
சுடர் என்பதே வெறுப்பாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே செய்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்



Idhayakkani - Thotta Idam Ellam

இதயக்கனி - புன்னகையில் கோடி பூங்கவிதை

புன்னகையில் கோடி பூங்கவிதை
பாடி கண்ணிரண்டில் மேவி
காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி
உன் போலே இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தூங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடிஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
உனக்குள்ளே முள்ளோ மலரோ என மயக்கம் பிறக்குதடி
எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்கான வடிவத்தை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
நாம் பருகி பார்க்கையில் மது போலே
ஒன்றும் அறியாத பெண்ணோ



Idhayakkani - Ondrum Ariyatha

இதயக்கனி - நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே 
அமைதி நிலவுமே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற



Idhayakkani - Neenga Nalla Irukkanam

இதயக்கனி - இதழே இதழே தேன் வேண்டும்

இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் 
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் 


ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
(ஹ்ம்ம்ம்ம் மெல்ல மெல்ல தொடுங்கள் )
தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி

இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)

நீராடும் துறை என்று நீ இருக்க
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
தீராத தாகங்கள் தீர்த்து விடு
என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு

இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)

கல்யாண காலத்தில் பல கனவு
கை கூடும் நேரம் தன் முதல் இரவு
நாம் தேடும் சொர்கத்தின் மணி கதவு
ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு
Please help me...

இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)



Idhayakkani - Ithazhe Ithazhe

இதயக்கனி - இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..


சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..


பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..


மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..



Idhayakkani - Inbame Undhan Per

Wednesday, January 30, 2019

கோரிப்பாளையம் - ஓட்ட ஒடைச்சல் இய்யம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்

ஓட்ட ஒடைச்சல் இய்யம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம் 
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம் 

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்  
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் 
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் 

ஓட்ட ஒடைச்சல் இய்யம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம் 
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம் 
வந்துப்பாரு-2 குதுர ஜாதிப்பொண்ணுடா 
வட்டக்கண்ணு-2 வயாகரா கண்ணுடா 

கண்ணம் பாரு-2 தேங்காப்பூவு கண்ணுடா 
கண்ணத்துலக் கண்ணம் வச்சா தேவையில்ல ஜிம்முடா 

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்  
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் 
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்   (ஓட்ட)

ஒத்திவிட்டுப் போகுதே ஊதக்காத்து நாகம்மா 
தாவணிய மந்திரிச்சி வெஷம் கலக்குது வேகமா 

டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா  
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா 
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா 

ஏய் அல்லிப்பூ மேனிடா அள்ளிக்கடா மொத்தம்மா 
மண்ணுத்திண்ணும் தேகத்த மனுசன் திண்ணா குத்தமா 

பட்டத்தண்ணிக் கொண்டாந்து இராத்திரியக்கொண்டாட 
பொண்ணழகக் கொண்டா நீ வாலிபாலு பந்தாட 

கட்டிலுக்கு வரட்டா கட்டி முத்தம் தரட்டா 
போத்தி வச்ச அழக எல்லாம் ஒரு குத்து பரோட்டா 

சரக்கு எறக்கு புடிக்கும் புது கிறுக்கு 
எனக்கு ஒனக்கு எதுக்கு ஒரு வழக்கு 

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்  
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்   (ஓட்ட)

என் அழகப்பாரு நீ இருட்டுச்சந்து மோகினி  
பாவப்பட்ட ஆணுக்கு பாழாப்போனப்பத்தினி 

டக்கர டக்கர டக்கர டக்கா  
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா 

கட்டிலுக்கு தோனி நீ சொர்க்கத்துக்கு ஏணி நீ, 
ஆசப்பட்டு குதிச்சிட்டா ஆள விழுங்கும் கேனி நீ, 

கட்டிலுதான் அம்மியா 
கொழவிக்கல்லு நாமெல்லாம்  
மல்லுக்கட்டு அரைப்போமா மல்லிகைப்பூ தொவையலு 

ஏ ஏவுகணை ஆராய்ச்சி ஏதும்மில்ல அன்னாச்சி 
வெண்ணிலவில் தண்ணி இருக்கு  
தெரிஞ்சிப்போச்சி உறவுல  

மணக்கும் மயக்கும் மலராய் ஒரு பருவம் 
இனிக்கும் உருகி கரையும் இரு இதயம் 

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்  
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்   (ஓட்ட)



Goripalayam - Oatta odaichal

கோரிப்பாளையம் - என்ன இந்த மாற்றமோ எம்மனசு வலிக்குதே

என்ன இந்த மாற்றமோ எம்மனசு வலிக்குதே 
கண்ணுரெண்டும் காந்தமோ 
என்னைக்கட்டி இழுக்குதே 
உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே 
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை நான் சேர்ப்பேனே 
நீ வந்ததும் என்னானது  
என் வாழ்க்கையே வேறானதோ   (என்ன)

ச்சின்னச்சின்னப் புன்னகையில் என்னைப்பரித்தாய் 
வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய் 
சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே 

மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய் 
மின் மினிக்கும் மின்னலைப்போல் ஒளிக்கொடுத்தாய் 
உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்  
வந்தாயடா என் அன்பே  

ஒரு பார்வைப் பார்க்கும்போதிலே 
எந்தன் தாகம் வானம் ஏறுதே 
மறு பாதிப்பார்க்கும் போதிலே 
எந்தன் ஜென்ம சாபம் தீருமோ 

என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல  
நான் கேட்டேனே 
நீ வந்ததும் என்னானது  
என் வாழ்க்கையே வேறானதோ   (என்ன)

சுற்றி உந்தன் முகம் அன்றி ஏதும் இல்லையே 
மற்றபடி வேற ஒன்னும் தொல்லை இல்லையே 
உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய் 
திண்டாடுதே என் நெஞ்சம் 

நெற்றிப்பொட்டில் நேற்றுவரைக் காய்ச்சல் இல்லையே 
நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே 
உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய் 
கொண்டாடுதே என் நெஞ்சம் 

உனைப்பார்த்துக் கொஞ்சிப்பேசத்தான் 
எந்தன் ஆசைத்தாவி ஓடுதே 
உனைப்பார்த்துப் பேசும் நேரத்தில் 
எந்தன் வார்த்தை ஊமையாகுதே 

கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா 
உன் இதழ்கள் சொல்லும்   (நீ வந்ததும்



Goripalayam - Enna indha maatramo

கோரிப்பாளையம் - ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே

ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே 
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே 
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே   (ஆரிராரோ)

தலையெழுத்தை தவறுதலாய் எழுதிவைத்தான் இறைவனடா 
தவறு எனக்குண்டோ ஓ... ஓ.... 
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை 
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே 
ஓ.... அழுவதேன் நெஞ்சே   (ஆரிராரோ)

மழையினிலே நனைந்திருந்தேன் 
வெயிலிலே உலந்து வந்தேன் 
கரைந்த சிலைப்போலே ஓ.... ஓ.... 
வெய்யிலும் அறியாத ஓ... பறவை எச்சம்போட 
முளைத்த விதை நான் துயரக்கதை நான் 
என் பிள்ளை நன்றாக ஒ... இறைவனே அருள்செய்க   (ஆரிராரோ)


Goripalayam - AariraarO kaettadhillai

கோரிப்பாளையம் - அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்கப் பார்க்கின்றதே

அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்கப் பார்க்கின்றதே 

அரும்பு மீசைக்கும் குறும்புப் பார்வைக்கும் 
ஆசை அலைப்பாயுதே 

யாரது.... போரது.... 
நெனைச்சதும்... மணக்குது... 

பஞ்சாரத்து கோனிப்போல  
பார்வையால மெய்மூடப் பார்க்குற 
வா வா மனமே வா   (அழகு)

இவளோட கண்ணு உன் மேல பட 
பார்த்தவளின் கண்கள் கண்ணுண்டு விழுந்த 
கொலைக்காரி பார்க்காதே எனக்கு நீ தேவைடா 

வேறு எந்த ஆள நீப்பார்த்துப்புட்டா 
வெட்டிடுவேன் உன்ன நான் ரெண்டு துண்டா 
பொய்யில்ல பொய்யில்ல 
நான் செய்வேன் காட்டட்டா 

உன்னை அள்ளி முடிஞ்சிக்கிட்டா 
கொசுவத்துல சொருகிக்கிட்டா 

சுடும்வரைக்கும் அனைச்சிக்கிட்டா 
விடும் வரைக்கும் அறிந்துக்கிட்டா 

ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்  
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்   (அழகு)

நான் போட்ட கோட்ட நீத்தாண்டிப்புட்ட 
உன்னோட கால நான் வெட்டுவேன்டா 
என்னோட இஷ்டத்துக்கு நீயும் வந்து வாழடா 

என் சொல்ல கொஞ்சம் நீ முடிப்போட்டா 
உன்னோட சங்க நான் அறுத்திடத்தான் 
கஷ்ட்டத்த தாங்கணும் என்னை நீ தேத்திட்டா 

உன்னை நானும் சேரத்தான் 
வழிப்பார்த்து வாழவா 

உசுரோடு கூடத்தான் நேசத்தால ஆளட்டா 

ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்  
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்




Goripalayam - Azhagu kaatteri

கோரிப்பாளையம் - ஆப்பக்காரி ஆப்பக்காரி

ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 

சொய் சொய் சொய்  
ஆ சொல் சொய் சொய் 
ஆ சொல் சொய் சொய் 
ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 
மந்திரிச்ச பாக்கெட்டுப் பொண்ணு 
வச்சிருக்கா பக்கா பக்கா 
தந்திரமா அதுல கொஞ்சம் மை தடவி பாரு மக்கா 
ஜான் புள்ள ஆனாலும் ஆண்புள்ள நாமடா 
ஏணி வச்சி எறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா 
அந்துரிக்கிது எந்திருக்குது வீராப்பு 
சங்கதி அது ஜோராப்பு வா மாப்பு 

கொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே   (ஆப்பக்காரி)

பின்னிப் பின்னிப் பெடலெடுத்து பிரிச்சி மேஞ்சிடவா 
கண்ணில் உன்னைக் கடைஞ்செடுத்து 
தண்ணி வதைக்காட்டிடவா 

கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  

தப்பே இல்லா தப்பு எது 
தத்துவம் பேசிடவா 
தத்துவத்தப் பேசிக்கிட்டே தப்புத்தண்டா செய்திடவா 
லந்து லந்து லந்து நீ பண்ணிக்கடா லந்து 
சந்துக்குள்ளப் பூந்து ஆடிக்கடா சூது 
கட்டாந்தரை நீச்சலு கையாம்முய்யாக் கூச்சலு 

சொய் சொய் சொய்  
ஆ சொய் சொய் சொய் 
ஆ சொய் சொய் சொய் 

காத்தடிக்கும் பம்ப்பு என உச்சி ஏறி எறங்குதடா 
பூசுப்போன பம்புக்கூட பிரகாசமா எரியுதடா 

கொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  

அட்டகாச அழகு எல்லாம் ஆட்டையப் போடுங்கடா 
அத்துமீறிப் போயிக்கூட அலப்பரப் பண்ணுங்கடா 
பள்ளத்தாக்குக்குள்ள ஹேப்பூத்திருக்கு முல்லை 
பாயவேணும் மெல்ல சுகமிருக்கு அள்ள 
வில்லங்கத்தப் பார்த்துத்தான் விலாவரித் தெரிஞ்சிக்க 
எடுத்துஊத்தும் நேரந்தான் பாடானாத்தான் புரிஞ்சிக்க   (ஆப்பக்காரி)



Goripalayam - Aappakkaari aappakkaari

Tuesday, January 29, 2019

குணா - பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒழி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..

இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இளகி, முத்து வடன் கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
நல்ல அரவின் படம் கொண்ட அன்பு பணிமொழி
வேதப் பரிபுரையே!! வேதப் பரிபுரையே!!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க!!



Guna - Paartha Vizhi Parthatpadi

குணா - அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன் என்றும் அம்மை என்றும் ...

குத்தம் குறை ஏதும் அற்ற சஜீவன் இங்க யார் அடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தான் அடா
சிவன்-ஐக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூட்டம் தான்
விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா
தட்டு கேட்டு ஓடும தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மானம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

அப்பன் என்றும் ...



Guna - Appan Endrum

குணா - கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

(கண்மணி)

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி



Guna - Kanmani Anpodu

குணா - உன்னை, நான் அறிவேன்

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்!
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை! 
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்



Guna - Unnai Naan

குரு - தம்தர தம்தர கண்கள் சொந்தம் சொல்ல

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை மொழியை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ

கண்கள் பார்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டு ஆவேன்
உன் இதழ் மேலே எழுதுவேன்

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்தையில்
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா

நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர

உன் வாடடங்கள் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்கையின் தேவை தீர்ப்பாய் வா

உந்தன் சேவை இவள்
செய்யும் போது
உந்தன் சேவை இவள் செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே

ஏய்
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மன்னவா

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை



Guru - Aye Manpuru Maange

குரு - ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஓ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஆருயிரே என்னை
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு
சகியே..

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆஹ்…ஒஹ்…ஆஹ்..

ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
உன் கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு
தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலங்களின் அழகியே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி
என் சகியே..
ஓ…

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆஹ்…ஆஹ்…
ரோஜாப்பூவை…..
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால்
நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன
தீருமா
உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே
மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே..

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஹோ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாட இரவாய் ஆகாதோ

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே



Guru - Aaruyire Mannipaya

குரு - நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

நாரே நாரே நாரே நாரே
நன்னநாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

வெண் மேகம் முட்ட முட்ட
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ
பன்னீரை மூட்டை கட்டி
பெண் மேலே கொட்டச் சொல்லி
விண் இன்று ஆணை இட்டதோ
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்
ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்
ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
மனசெல்லாம் ஜில்

நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே (4)
வெண் மேகம்...
வெண் மேகம் முட்ட - ஹேய்
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ

கிலி கிலி கிலி ஹா
ஹ ஹ ஹ ஹா
ஹ ஹ ஹ ஹா

வயல் வழி ஆடும்
வண்ணத் தும்பிகளே - உங்கள்
வால்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும்
பிள்ளை நண்டுகளே - மணல்
வலைகளில் நான் இருந்தேன்
மலையின் தாய் மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இங்கே நதியாய் இறங்குகின்றேன்
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
காட்டுப் புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும்

நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே (4)

விடை கொடு சாமி
விட்டுப் போகின்றேன் - உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே
வாசல் தாண்டுகிறேன் - உந்தன்
திண்ணைக்கு நன்றி சொன்னேன்
கதவுகள் திறக்கும் வழி - என்
கனவுகள் பறக்கட்டுமே
போகின்ற வழி முழுக்க - அன்பு
பூக்களே மலரட்டுமே
இந்தச் செல்லக் கிளி மழை மேகத் துளி
இந்தச் செல்லக் கிளி மழை மேகம் விட்டுத் துள்ளும் துளி

நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே (7)
நன்னாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே



Guru - Ven Megham

குரு சிஷ்யன் - உத்தம புத்திரி நானு

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

பெண் ஜென்மங்கள் எல்லாமே ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும் ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம்.. இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட வெறும் ஏட்டில் வாழும் மானே
கோப்பைதான் என் கையோடு.. போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு.. ஆலோலம் என் நினைவோடு
சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

தரரரர தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தா தரத்தா தரத்தா
தரத்தா தரத்தா தா..
...

என் எண்ணத்தில் இப்போது ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட.. வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை.. இப்போ கானல் நீராய் ஆச்சு
போடி போ.. நீ தனியாளு.. நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு.. உன் மனம் போலே.. பூத்தாடு.. பொன் மலர் போலே

சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ




Guru Sishyan - Uthama Puthiri Naanu

குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே

வா வா வஞ்சி இளமானே

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே


ஈரெட்டு வயதில் ஈர தாமரை
வாய் விட்டு சிரிக்காதா

வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்
தேன் சொட்டு தெரிக்காதா

தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தனித்துதிட வா..

ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா

பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா

போதும் போதும் போ


வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே


நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே

நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே

ஆசைகள் எனக்கும் அங்காங்கே சுரக்கும்
அளைத்தான் அசத்துவது ஏன்

பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா

கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா

நேரம் காலம் ஏன்...

வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே

வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே



Guru Sishyan - Vaa Vaa Vanji

குரு சிஷ்யன் - கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்

ஜங்குஜங்குஜான் ஜங்குஜங்குஜான்
ஜங்குசான் ஜான் ஜங்குஜங்குஜான்
தங்குறாதாங்குதான் தங்குறா தங்குதான்
ஹஹ ஹாஆஆஹஹ ஹ ஹ (இசை)

ஹோய்.கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்..


மாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு ஏதாச்சும் பன்னாளா
உள்ளாற ஏதேதோ ஞாபகம்
உன் பாட்ட நெஞ்சோடு பாடுற
த்தனக்கட த்தனக்கட த்தனக்கட தின தின

என்னான்னு ஏதுன்னு கேட்டதும்
சொல்லாமா கொள்ளாம மூடுறே
ஹொய் ஹொய் ஹொய் ஹோய்
எத்தனைப் பேர் பார்த்திருக்கேன்
எங்கிட்ட நீ மறைக்காதே
சோத்துல முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே
காதில் பூவை சுத்திப்பார்க்க
நீ தான் நினைச்சா நடக்காதே

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று.ஓய்..
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
தர தரத்தானத்த தானத்த தா


தினத்துன
காதல் கலையில் நான் தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி
கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாழ்த்தை ஏத்துக்கோ

த்னத்துனஜிங்குரதான்த்தா..ஜிங்குரதான்த்தா
பெண்டாட்டி ஆகாத காதலி
தாயாக ஆகாம பார்த்துக்கோ
ஹோய் ஹோய் ஹோய்...

ஹோய் ஆத்திரத்தில் துடிக்காதே அவசரமா புடிக்காதே
தூண்டியில மீனாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே
திட்டம் போட்டு வட்டம் போடு
குருவின் பேரை கெடுக்காதே

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று


ஹஹ்ஹஹ
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்.. ஹோய்



Guru Sishyan - Kandu Pudichen

Followers