Pages

Search This Blog

Friday, December 28, 2018

சீதக்காதி - ஐயாவே எதை பார்க்கிறாய் நெடு நேரமாய்

ஐயாவே எதை பார்க்கிறாய்
நெடு நேரமாய்
வாழ்ந்ததெல்லாம் எதிரே
சருகாய் வீழ்கிறதோ

அத்தனை பாசமும்
நாள்பட்ட ஏக்கமும்
ஓர் நொடியில் துளியாய்
தனியாய் காய்கிறதோ

பாறையின் மேல் பெரு வெளிச்சம்
தங்கி சென்றே போகிறதே
தியாகமெல்லாம் தலை குனிந்தே
மௌனங்களாய் அழுகிறதே
உயிர் சாவில் முடிவதில்லை

காணலே மெய்யாக
பழகிவிட்டால் இங்கே
ஈரமாய் தொடும் நதிகள்
சிலிர்பதுண்டோ உள்ளேஏ

ஆழத்தின் ஆழங்களை
பார்த்த மௌனத்தினை
ஓசை ஜெய்பதுண்டோ
காலத்தின் தூரம் வரை
வேர்கள் விட்ட மரம்
சாவில் உதிர்வதுண்டோ

தன்னந்தனியே அழுது விட்டே
போனதெங்கே கூமானே
ஒப்பனை தான் கலைந்த பின்னே
உன் முகமாய் ஆனாயோ

கலை சாவை மதிப்பதில்லை
ஏகானந்த மலர் சாய்ந்ததே
எரி மீதிலே
வேகிறதே தனியாய்
இது தான் முடிவா



Seethakaathi - Uyir

Followers