Pages

Search This Blog

Wednesday, December 5, 2018

திமிரு புடிச்சவன் - நீ உன்னை மாற்றிகொண்டால் உலகம் மாறும்

நீ உன்னை மாற்றிகொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைகொண்டால்
உயரம் கூடும்

மூச்சு விடுவது
வாழ்க்கை இல்லையே
முயற்சி செய்து பார்
வானம் எல்லையே

மனசாட்சியை தினம்
மாட்டி வை அருகில்
அழகு என்பதே
நாம் செய்திடும் செயலில்

நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்

எல்லோரும் நல்லவன் தான்பா
சூழல் தான் ஆக்குது தப்பா
திருந்திட வாய்புகள் வந்தா
திரும்பவும் ஆவான் டாப்பா

நீ செய்யிற
வேலையே கடவுளடா
உன் வெற்றிக்கு தோல்வி தான்
சூத்திரம் டா
நீ தெளிவாக இன்னைக்கு
வேலை செஞ்சா
வரும் தடைகளை
நாளைக்கு தாண்டுவடா

நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்

அன்பாலே ஈர்க்கலாம் ஊரை
உதவியே வாங்கலாம் பேரை
குறை சொல்லி வாழாதே என்றும்
விதி மீது கை காட்ட தோன்றும்

வலியிங்கு வாழ்க்கையே
இல்லையடா
வலிக்காமல் சிகிச்சைகள்
இங்கு இல்லடா
உன் நேர்மையில் நம்பிக்கை
வச்சுக்கடா
இனி அது உன்னை
வைக்குமே உச்சிலடா

நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்



Thimiru Pudichavan - Nee Unnai Matrikondal

Followers