Pages

Search This Blog

Friday, November 30, 2018

முதல்வன் - உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் ஒத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
உன் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே..

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

Mudhalvan - Ulundhu Vithakkaiyilae

Followers