காதல் கண்மணியே யே யே…
கல்யாணமாம் கல்யாணம்,
காதல் கண்மணிக்கு கல்யாணம் !
கல்யாணமாம் கல்யாணம்,
காதலி பொண்ணுக்கு கல்யாணம் !
ஒண்ணா சிரிச்சு
மெய்யா பழகி
கண்ணால் பேசி
காத்துக் கிடந்தது
ஒருவர் மடியில்
ஒருவர் சரிந்து
உறங்கிடாமல்
கனவும் கண்டு
கடைசிவரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அத்தனை எல்லாம்
மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே…
கல்யாணமாம் கல்யாணம்…
லலலா… லலலா…
காதல் கண்மணியே யே யே
கூறச் சேல
மடிச்சு கட்டி
குங்குமபொட்ட
நெத்தியில வச்சி
மணவறையில் அவ இருப்பா
மகாராணியா
அவள காதலிச்சவன்
கலங்கி நிற்பான் அப்பிராணியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
கெட்டி மேளம்
காது பொளக்க
நாதஸ்வரம்
ஓங்கி ஒலிக்க
கச்சேரியே ரசிச்சிருப்பா
ஊரு முன்னால
அவள காதலிச்சவன்
கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
சாதி சனத்த
வணங்கிக்கிட்டே
சட்டுன்னு சட்டுன்னு
சிரிச்சுக்கிட்டு
பரிசுப் பொருள வாங்கி வப்பா
ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன்
கசங்கி நிற்பான் சந்நியாசியா
வக வகயா
சமைச்சு வச்சு
வாழ இலையில்
பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டி விட்டுவா
போட்டோ புடிக்கத் தான்
அவள காதலிச்சவன்
மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்
மங்களத் தாலி
கழுத்தில் ஆட
மந்திர வார்த்த
அய்யரு ஓத
காரில் ஏறி போயிடுவா
புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன்
வந்துடுவானே நடு ரோட்டுக்கு
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
காதல் கண்மணியே…….யேஏஏஏஏ!
கல்யாணம் கல்யாணம்
காதலிப் பொண்ணுக்கு கல்யாணம் !
Cuckoo - Kalyanamam Kalyanam