Pages

Search This Blog

Friday, February 3, 2017

வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே...
(அடியே கொல்லுதே...)

இரவும் பகலும் உன்முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சரியும்
மண் சரிவைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே...
(அடியே கொல்லுதே...)

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொன்னால் வார்த்தை என் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே...

அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...

உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே..

Vaaranam Aayiram - Adiye Kolluthey

Followers