Pages

Search This Blog

Wednesday, January 4, 2017

மன்னாதி மன்னன் - காவிரித் தாயே பொன்னிப் பெருந்தாயே

தாயே .. காவிரித் தாயே ..
பொன்னிப் பெருந்தாயே
புகழ் வளர்த்த காவிரியே
தென்னவனைக் கொண்டு சேர்த்த இடம் கூறாயோ தாயே ..... காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே

ஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ?
ஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ?
அழகினிலே மயங்கி நீ மறைத்தாயோ?
காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
கரை புரண்தோடுகிறாய் மணமுருகாதோ?
என் கண்ணீரும் சேர்ந்து விட்டால் கரை உடையாதோ?
கைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ?
கைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ?
கருணை மனமிரங்கி வாழ வைப்பாயோ?
காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே

கள்வர்கள் கன்னமிட்டால் உன்னிடம் சொல்வோம்
காப்பவள் கன்னமிட்டால் யாரிடம் சொல்வோம்?
அங்கமெல்லாம் தளர்ந்து பதறுகின்றேனே
அங்கமெல்லாம் தளர்ந்து பதறுகின்றேனே
அன்பரைத் தந்து என்னை வாழ வைப்பாயே


மணி முடி தழைக்க வந்த மன்னவன் எங்கே?
மனையறம் காக்க வந்த மன்னவன் எங்கே?
கொள்கையிலே வளர்ந்த கொற்றவன் எங்கே?
எங்கே ..எங்கே .. எங்கே .. எங்கே .

Mannadhi Mannan - Kaaviri Thaaye Kaaviri Thaaye

Followers