Pages

Search This Blog

Friday, January 6, 2017

தர்மயுத்தம் - ஆகாய கங்கை போனதேன் மலர் சூடி

ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி
பொன் மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்கலம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்கலம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்…ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்…ஹோ ஹோ ஹோ ஹோ
காதல் நெஞ்சில்…ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்…ஹோ ஹோ ஹோ ஹோ
காலை…வேளை…பாடும் பூபாளம்
மன்னா இனி…உன் தோளிலே
படரும் கொடி நானே பருவப்பூ தானே
பூமஞ்சம்…உன் மேனி
எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்கலம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும்…ஹே ஹே ஹே ஹே
தெரிந்த பின்னும்…ஹோ ஹோ ஹோ ஹோ
தேவை யாவும்…ஹே ஹே ஹே ஹே
தெரிந்த பின்னும்…ஹோ ஹோ ஹோ ஹோ
பூவை…நெஞ்சில்…நாணம் போராடும்
ஊர் கூடியே…உறவானதும்
தருவேன் பல நூறு பருக கனிச்சாறு
தளிரான…என் மேனி
தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி
பொன் மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்கலம் நாடுவான் சங்கமம்
லாலலா லாலலா லாலலா லாலலா



Dharma Yuddham - Aagaya Gangai Poonthen

Followers