Pages

Search This Blog

Wednesday, January 4, 2017

அழகன் - சாதி மல்லி பூச்சரமே

சாதி மல்லி பூச்சரமே , சங்கத்தமிழ் பாச்சரமே ,
ஆசையென்ன ஆசையடி , அவ்வளவு ஆசையடி ,
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ ...

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் ,
கன்னித் தமிழ் தொண்டாற்று , அதை முன்னேற்று ,
பின்பு கட்டிலில் தாலாட்டு ..

எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?
யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி ,
பாடும் நம்தமிழ் பட்டன் சொன்னது பொன்மணி ..
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?
பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான் ..
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ..

உலகம் யாவும் உண்ணும்போது 
நாமும் சாப்பிட எண்ணுவோம் ..
உலகம் யாவும் சிரிக்கும்போது 
நாமும் புன்னகை சிந்துவோம் ...
தாயும் வேறல்ல நாடும் வேறல்ல ஒன்று தான் ,
தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான் 
கடுகு போல் உன்மனம் இருக்ககூடாது ,
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும் ...

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ....



Azhagan - Sathi Malli Poocharame 

Followers