Pages

Search This Blog

Wednesday, January 4, 2017

ஆயிரத்தில் ஒருவன் (1965) - நாணமோ இன்னும் நாணமோ

நாணமோ? இன்னும் நாணமோ?
இந்த ஜாடை நாடகம் என்ன? 
அந்தப் பார்வை கூறுவதென்ன? 
நாணமோ? நாணமோ?
ஆஆஆ நாணுமோ? இன்னும் நாணுமோ?
தன்னை நாடும் காதலன் முன்னே
திரு நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ? நாணுமோ?

நாணமோ? இன்னும் நாணமோ?
இந்த ஜாடை நாடகம் என்ன? 
அந்தப் பார்வை கூறுவதென்ன? 
நாணமோ? நாணமோ?

தோட்டத்துப் பூவினில் இல்லாதது ஒரு 
ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது ஒரு 
ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது அது எது?

ஆடவர் கண்களில் காணாதது 
அதுகாலங்கள் மாறினும் மாறாதது
ஆடவர் கண்களில் காணாதது 
அதுகாலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது அது இது

நாணுமோ? இன்னும் நாணுமோ?
தன்னை நாடும் காதலன் முன்னே
திரு நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ? நாணுமோ?

மாலையில் காற்றினில் உண்டாவது 
அதுமஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது அது எது?

உண்டால் மயக்கும் கள்ளாவது
அதுஉண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது அது இது

நாணமோ? இன்னும் நாணமோ?
இந்த ஜாடை நாடகம் என்ன? 
அந்தப் பார்வை கூறுவதென்ன? 
நாணமோ? நாணமோ?

Aayirathil Oruvan (1965) - Naanamo Innum Naanamo

Followers