Pages

Search This Blog

Thursday, December 29, 2016

பிரம்மா - இவள் ஒரு இளங்குருவி, எழுந்து ஆடும்

இவள் ஒரு இளங்குருவி, எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை தத்தி தத்தி பழகும்

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
கால் போகும் போக்கில்.. மனம் போகும் நாளில்..
கிடையாது தடை போட முள்வேலிதான்
நான் போகும் பாதை.. நிழல் போல கூட..
வருகின்ற பூங்காற்றும் என் தோழிதான்
நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரை தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்தன் ஊரை தேடுதோ
நானும் என்னை கேள்வி கேட்கும் நாள் இது..
திரு நாள் இது..
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
நான் பாடும் பாட்டு.. தலையாட்டி கேட்டு..
தினம் தோறும் பூ பூக்கும் தோட்டங்களே
நீரோடை மீது நொடி போதில் பாய்ந்து
இரை தேடும் சென்னாரை கூட்டங்களே
ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு ஆட்டம் ஆடுவேன்
ஆவல் தீர தாளம் போட்டு பாட்டு பாடுவேன்
வேனிற்காலம் வாழ்த்து கூறும் நாள் இது..
திரு நாள் இது..
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை தத்தி தத்தி பழகும்

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி

Bramma - Ival Oru Ilanguruvi

Followers