Pages

Search This Blog

Wednesday, November 23, 2016

காக்க காக்க - தூது வருமா தூது வருமா

தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
(தூது வருமா..)

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே 
சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் 
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா
(தூது வருமா..)

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே
நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே
சவுக்கடி கொடுக்கும் யுவனே 
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
(தூது வருமா..)

Kaakha Kaakha - Thoodhu Varuma

Followers