Pages

Search This Blog

Monday, November 21, 2016

பொங்கி வரும் காவேரி - வெள்ளி கொலுசு மணி

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன 
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன 
பாடாத ராகம் சொல்லி  பாட்டு படிச்சதென்ன 
கூடாம கூட வச்சு சேத்ததென்ன 

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன 

துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான் 
மெல்ல மெல்ல வந்து அணைக்கும் 
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச 
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும் 
பொன்னி நதிப்போல நானும் உன்ன 
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா 
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண 
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா 
காத்து காத்து நானும் பூத்துப் பூத்துப் போனேன் 
சேந்து பாடும்போது தேரில் ஏறலானேன் 
உன் பேரச்சொல்லி பாடி வச்சா ஊறுதம்மா  தேனே 

வெள்ளி கொலுசு மணி .......

கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த 
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான் 
எண்ணம் முழுதும் பொங்கி வழியும் 
வாங்கினது நல்ல வரம்தான் 
கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன் 
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன் 
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன் 
சாவியத்தான் தொலச்சுபுட்டேன் 
உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு 
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு 
காலமெல்லாம் கேட்டிடத்தான் காத்திருக்கேன் பாத்து 

வெள்ளி கொலுசு மணி ......

Pongi Varum Kaveri - velli kolusu mani

Followers