அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே
கையோ உன்னால் எரிஞ்சேன் நானே
அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
அடடா பிரம்மன் உன்னை பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே
கையோ பெண்ணே எரிஞ்சேன் நானே
வயதும் மனதும் உனைக் கண்டாலே
இன்று கலங்குதடா நான் துடிப்பேன்
வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு
இடைஜினம் தான் நான் ரசிப்பேன்
குறும்பாக நீ சிரிக்க சாட்சி போட
அதற்கு இந்த ஊரில் இல்லை விலையே
ஐம்பொன்னில் பஞ்சும் கொனஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு வைச்ச சிலையே
இரு இதயம் இணையும் தருணம் போகாதே
இதழும் இதழும் அடி ஒன்றாக சேர
விரும்பிடுதே நெருங்கிடுதே
இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே
சிரிச்சாலே கன்னம் என்னும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே.....
சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச என்னையே
இரு இதயம் இணையும் தருணம் போகாதே
Vasuvum Saravananum Onna Padichavanga - Adada Onnum Solladha