சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
சோலைக்குயில் பாடும்..
ஹ்ம்ஹூம்.. அப்படி இல்லே..
தானனன னானா னானனனனானா..
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
ம்ம்.. அப்படித்தான்..
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதேன்?
இசையின் லயத்தில் அல்லவா?
அதை உள்ளே கேளு நீயும் பாடு..
(சோலைக்குயில்..)
கொட்டும் மழை முடிந்திட பிறகு
கொடிகளில் இலையில் இருந்து
சொட்டுகின்ற மழையின் துளிகள்
பல கதை சொல்லுமே அதை கண்டுபிடி மனமே
குடங்களை குளத்தில் நிறைத்து
குமரிகள் நடக்கும் பொழுது
குடத்துக்குள் தழுங்கும் அலைகள்
சப்தஸ்வரம் சொல்லுமே
நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறன்றோ
பறவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ
பெண்ணின் கையோடு வலையொலி சங்கீதம்
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்
அந்த வலையும் கொலுசும் சங்கீதம் உனக்கு சொல்லித்தரவா
(சோலைக்குயில்...)
துள்ளி வரும் குழந்தை எடுத்து அள்ளிவைத்து அணைக்கும் போது
நெஞ்சுக்குள்ளே நஞ்சை உதைப்பது சின்ன சுகமல்லவா
அது நெஞ்சுக்கு அழகல்லவா
இதயங்கள் எறியும் பொழுது இதயத்தை புரிந்த ஒருத்தி
இருந்தால் சின்ன சுகமல்லவா
சுற்றமெல்லாம் போன பின்னும் தனிமைதான் சின்ன சுகம்
வெண்ணிலவு போன பின்னும் வெட்டவெளி சின்ன சுகம்
இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்
இந்த சந்தோஷம் சோகத்திலும் சின்ன சுகம்
ஒரு ஆனந்த பூங்காற்றாய் அள்ளி தருவது இசை இசை அல்லவா
(சோலைக்குயில்..)
Anantha Poongatre - Solai Kuyil