மன்னவனே! மன்னவனே!
மாயலோக மன்மதனே!
தீக்கடலை தாண்டிவரும்
தென்னவனே!
வல்லவனே! வல்லவனே!
யானைபலம் உள்ளவனே!
வானவில்லால் அம்பு விடும்
வல்லவனே!
கத்தியின்றி
ரத்தமின்றி
வெறும் கண்ணால்
கொலை செய்வாய்!
இவள் ராணி கோட்டை இளவரசி
உனக்கென்ன வேண்டும்
பொன்னின் மலையா?
பெண்ணின் சிலையா?
மன்னவனே மன்னவனே
மாயலோக மன்மதனே
தீக்கடலை தாண்டி
வரும் தென்னவனே
வல்லவனே வல்லவனே
யானை பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே
என் வாளும் வேலும் வெல்ல...
வானை முட்டிதள்ள...
சிறகு முளைத்த வேங்கை
நானே இப்போது.
என் வானம் தாண்டி செல்ல
நீ மாயபறவை அல்ல
என்னை மீறி வேங்கை
எங்கும் தப்பாது.
வானில் விண்மீனோ நானே
கடலில் கருமீனோ நானே
ரெண்டும் அட உந்தன் கையில் சேராது
வானம் என் வளையல் பெட்டி
கடலோ என் நீச்சல் தொட்டி
மீன்கள் என் காலின் மெட்டி
மாயஜாலம் ஓயாதிங்கே..
மன்னவனே மன்னவனே
மாயலோக மன்மதனே
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே
வல்லவனே வல்லவனே
யானை பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு
விடும் வல்லவனே
ஹே ஆண்டான் அடிமை எல்லாம்
ஆண்டவன் இட்ட சட்டம்
மேலோர் கீழோர் எல்லாம்
விதியின் உத்தரவு
ஹே ஆண்டான் அடிமை எல்லாம்
சட்டம் அல்ல திட்டம்
இறைவன் பேரால் மனிதன்
செய்த சச்சரவு
காட்டில் இது எங்கள் ஆட்சி
நீயோ ஒரு பட்டாம்பூச்சி
காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே
பூவில் சிறு தேனை கொல்ல
ஆட்சி அது தேவை இல்லை
எரியும் தீக்குச்சி போதும்
கரியாய் மாறும் மொத்தக்காடும்
ஆண்மையுள்ள ராணி இவள்
ஆள வந்த ஞானி இவள்
ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை
வான் அணிந்த வெண்ணிலவும்
தேய்வதுண்டு சாய்வதுண்டு
நான் அணிந்த கிரீடம்
என்றும் சாய்வதில்லை
Puli - Mannavanae Mannavanae