Pages

Search This Blog

Thursday, January 9, 2014

வீரம் - கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ (2)

அந்த வானவில்லின் பாதி
வெண்ணிலவின் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள் தானா இவள் தானா

மழை மின்னலென மோதி
மந்திரங்கள் ஓதி
என் கனவை வென்றானே
இவன் தானா இவன் தானா

போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால்
சுமைகள் ஆகுதே ஓ
இவள்தானா ஓ இவள்தானா

கண்ணும் கண்ணும் ....

சரணம் - 1

வினா வினா ஆயிரம்
அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே

தனியே நீ வீதியிலே நடந்தால்
அது பேரழகு
ஒரு பூ கூர்த்த நூலாக தெருவே
அங்கு தெரிகிறது

காய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்
இவன் தானா இவன் தானா

சரணம் - 2

குடை குடை ஏந்தியே
வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்

அடடா உன் கண் அசைவும்
அதிரா உன் புன்னகையும்
உடலின் என் உயிர் பிசையும்
உடலில் ஒரு பேர் அசையும்

காற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்
இவள் தானா ஓ இவள் தானா

கண்ணும் கண்ணும் ....

Veeram - Ival thaana

Followers