Pages

Search This Blog

Monday, January 6, 2014

காதல் ஓவியம் - பூவில் வண்டு கூடும் கண்டு

நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்

(பூவில்)

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)

Kadhal Oviyam - Poovil Vandu

Followers