கனவே கலையாதே காதல் கனவே கலையாதே
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
கனவே கலையாதே காதல் கனவே கலையாதே
நீ மௌனம் காக்கும் போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப்பூக்கள் சொல்லும் இல்லையா
ஒரு திங்கள் தட்டும் போதும்
கடும் புயலே முட்டும் போதும்
அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையா
உன் இதழைக் கேட்டால், அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும்
ம்ம்.. இதயத்தை கேட்க்க நேரமில்லை
இதுவரை இதயத்தில் யாருமில்லை
கண்டும் கிடைத்தால் தருவாயா
கையேந்தியே நான் கேட்பது............
உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக் கொண்டு
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே
மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு
அதுதானே பொய்யும் பொழிய பாக்காதே
நீ மழையின் முகிலா இல்லை இடி தரும் முகிலா
என் ?வேதனிப்பாயா இல்லை விலகிடுவாயா
ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே
கையேந்தியே நான் கேட்பது.................
Kannedhirey Thondrinal - Kanave Kalaiyadhe