Pages

Search This Blog

Monday, January 27, 2014

மலைக்கோட்டை - உயிரே உயிரே உறைந்தேனே

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி

உன் பட்டு கன்னம் புத்தகம்
அதில் உதடுகள் எழுதுவதெப்படி
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா
அது பகலிலும் ஒளிர்வது எப்படி
உன் வீதி சேர்ந்ததும் வருகிற
பதட்டம் குறைப்பது குறைப்பது எப்படி
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்
வருவது வருவது எப்படி
என் வாழ்க்கையா ...என் வேட்கையா ..
ரெண்டாகவும் தெரிந்தாயே ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உன் எச்சில் முத்தம் சம்மதம்
அது தினசரி தொடர சம்மதம்
உன் உச்சுகொட்டல் சம்மதம்
அது உயிர் குழி பறிக்க சம்மதம்
உன் காதின் ஓரமாய் புரளும் முடியை
காலைக் கோடி சம்மதம்
உன் ஈர சேலையில் வழியும் துளி போலே
உருள நானும் சம்மதம்
இனி என் ஞாபகம் ...உன் பூ முகம் ..
கண்டி போலே எனை காட்டும் ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

Malaikottai - Uyire Uyire

Followers