Pages

Search This Blog

Thursday, December 26, 2013

பூவெல்லாம் கேட்டுப்பார் - பூவெல்லாம் மாலைகள் ஆகும்

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

வானகம் தூரம் இல்லை வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டம் இட்டு தன்னை தானே சுற்றும் பூமி
நம்மைச் சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம் ....

பூவெல்லாம் ...

Poovellam Kettuppar - Sevvaanam Vetkam Kondathu

Followers