Pages

Search This Blog

Friday, December 20, 2013

பாட்ஷா - தங்கமகன் இன்று

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என்
காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேக்குது
வா என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

===

சின்னக் கலைவாணி
நீ வண்ண சிலை மேனி
அது மஞ்சம் தனில் மாறன்
தலை வைக்கும் இன்பத் தலகாணி

ஆசைத் தலைவன் நீ
நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச
நீ தான் மருதாணி

ஆண் : திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்

தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்

என்ன சம்மதமா

இன்னும் தாமதமா

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

===

தூக்கம் வந்தாலே மனம்
தலையணை தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம்
ஜாதகம் பார்க்காது

மேகம் மழை தந்தால்
துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும்
விதிதான் மாறாது

என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்

கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்

எனை மாற்றி விடு

இதழ் ஊற்றி கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை உன்
காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதோ

முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட
வா என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்ashha - Thanga Magan

Followers