Pages

Search This Blog

Monday, December 2, 2013

ஆனந்தம் - என்ன இதுவோ என்னைச்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க காற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எதன் வாழ்வில் வீசுவாய்
(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பதுவும்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
(என்ன இதுவோ..)

Aanandham - Enna Ithuvo Ennai Suttriye

Followers